Saturday, August 6, 2022

சமவெளி

 

சமவெளி பற்றிய தகவல்கள்

இது உலகின் உணவுக் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. சமவெளி என்பது பரந்து விரிந்து உயரத்தில் மாற்றங்கள் இல்லாத சமதளமாகக் காணப்படும் நிலப்பகுதி ஆகும்.இது உலகில் காணப்படும் முக்கிய நில வடிவங்களில் ஒன்றாகும்.

சமவெளிகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள நிலப்பரப்பில் 55 சதவீதம் சமவெளிகளால் ஆனதுஉலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர்.

சமவெளிகள் மலைகளின் அடிவாரத்தில், கடற்கரையின் ஓரங்களில், பள்ளதாக்குகளில் மற்றும் பீடபூமிகளின் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.

Tuesday, August 2, 2022

தரம் 10 அலகு 03

உலகின் பிரதான நிலப் பயன்பாட்டின் பிரதான வகைகள்
01. விவசாய நிலப்பயன்பாடு என்றால் என்ன?
    பயிர்ச்செய்கைக்கு நிலத்தைப் பயன்படுத்துவதாகும்.
02. விவசாய நிலப் பயன்பாட்டின் பிரதான அம்சங்கள் எவை?
    பிழைப்பூதியம், வர்த்தக விவசாயம்
03. விவசாயத்துறையில் நிலப்பயன்பாட்டின் பெறுமானம் குறையாமைக்கான     காரணங்கள் எவை?
    1. மக்களுக்குத் தேவையான உணவினை வழங்கல்
    2. கைத்தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குதல்.
    3. உலக சனத்தொகையில் பெரம்பான்மையானோர் விவசாய                                       நடவடிக்கைகளில் ஈடுபடல்
    4. உலக வர்த்தகத்தில் விவசாய உற்பத்திகள் முக்கிய இடம்பெறுகின்றன.