உலகின் பிரதான நிலப் பயன்பாட்டின் பிரதான வகைகள்
01. விவசாய நிலப்பயன்பாடு என்றால் என்ன?
பயிர்ச்செய்கைக்கு நிலத்தைப் பயன்படுத்துவதாகும்.
02. விவசாய நிலப் பயன்பாட்டின் பிரதான அம்சங்கள் எவை?
பிழைப்பூதியம், வர்த்தக விவசாயம்
03. விவசாயத்துறையில் நிலப்பயன்பாட்டின் பெறுமானம் குறையாமைக்கான காரணங்கள் எவை?
1. மக்களுக்குத் தேவையான உணவினை வழங்கல்
2. கைத்தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குதல்.
3. உலக சனத்தொகையில் பெரம்பான்மையானோர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடல்
4. உலக வர்த்தகத்தில் விவசாய உற்பத்திகள் முக்கிய இடம்பெறுகின்றன.
04. விவசாயப் பயிர்களுடன் தொடர்புபட்ட பல்வேறு வகையான உற்பத்திகளை தருக?
நெற்பயிர்ச்செய்கை
05. ஆசிய நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்களின் உணவு எது?
நெல்லரிசிச் சோறு
06. ஆசியாவில் நெல் பயிரிடப்படும் முக்கிய நாடுகள் எவை?
1. தாய்லாந்து 2. சீனா 3. இந்தியா
4. இந்தோனேசியா 5. ஜப்பான் 6. பாகிஸ்தான்
07. ஆசியாவிற்கு வெளியே நெல் பயிரிடப்படும் பிரதேசங்கள் எவை?
1 இத்தாலியின் போ நதிப் பிரதேசம்
2 அபிரிக்காவின் நைல்நதிப் பிரதேசம்
3 வட அமெரிக்காவின் சக்ரமன்ரோ பிரதேசம்
4 பிறேசிலின் கிழக்குக் கiயோரப்பகுதி
5 அவுஸ்ரேலியாவின் மறேடார்லிங் நதிப் பள்ளத்தாக்கு
08. மலைப்பாங்கான பிரதேசத்தில் நெற்பயிர்ச்செய்கை எவ்வாறு மேற்கொள்ளப்படும்?
படிக்கட்டு முறையில்
09. ஆசியாவில் இடம்பெறம் நெற்பயிர்ச்செய்கையின் பிரதான பண்பு எது?
உற்பத்தி செய்யப்படுகின்ற பிரதேசங்களை அவற்றை நுகருதல்
10. நெல் பயிரிடப்படும் நாடுகளை உலகப்படத்தில் குறித்துக் காட்டுக.
11. நெற்பயிர்ச்செய்கைக்கு சாதகமான காரணிகள் எவை?
1 வெப்பநிலை 27பாகை C
2 மழைவீழ்ச்சி 2000 மில்லி மீற்றர்
3 வளமான வண்டல் மண்
4 தாழ்வான சமவெளிப் பிரதேசம்
12. நெற்பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?
1 சிறிய நிலப்பரப்பில் பயிர் செய்யப்படுதல்.
2 சில சாடுகளில் வர்த்தக அடிப்படையில் பரந்த நிலப்பரப்பில் பயிர் செய்யப்படுதல்.
3 ஆசிய நாடுகளில் ஊழியச் செறிவு கொண்ட பயிர்ச்செய்கையாகக் காணப்படும்.
4 மரபணுத் தொழினுட்ப முறையில் நோய்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதைகளை அறிமுகஞ் செய்தல்.
5 விசேட தரங்களைக் கொண்ட நெல் உற்பத்தி செய்யப்படுதல்.(பொன்னி அரிசி)
13. நெற் பயிர்ச்செய்கை தொடர்பான அண்மைக்காலப் போக்குகள் எவை?
1. சேதன உரப்பாவனை அதிகரிப்பு
2. இயந்திரப் பாவனையின் அதிகரிப்பு
3. புதிய நெல்லினங்கள் கண்டுபிடிக்கப்படல்
4. பிரதியீட்டுப் பொருட்கள் புதிய முறையில் உற்பத்தி செய்யப்படுதல்.
கோதுமை
14. உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதும் நுகரப்படுவதமான தானியம் எது?
கோதுமை
15. கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளை குறித்துக் காட்டுக.
16. கோதுமையை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகள் எவை?
சீனா, இந்தியா, ரஸ்யா, ஐக்கிய அமெரிக்கா
17. கோதுமைப்பயிர்ச்செய்கைக்கு அவசரியமான காரணிகள் எவை?
1. வெப்பநிலை 12 பாகை C - 25 பாகை C
2. மழைவீழ்ச்சி 300 – 500 மில்லி மீற்றர்
3. பயிர் வளருகின்ற காலத்தில் காணப்படும் குளிர்ச்சியான ஈரக் காலநிலை
4. நன்கு நீர் வடிந்தோடக்கூடிய தட்டையான நிலம்
5. சேணாசம் மண்
18. கோதுமைப் பயிர்ச்செய்கையின் விருத்திக்குப் பங்களிப்புச் செய்த காரணிகள் எவை?
1. களைகொல்லிகள்
2. புதிய வகை விதைகள்
3. போதுமான மூலதனம்
4. இயந்திரப் பாவனை
5. நவீன தொழினுட்பங்கள்
19. கோதுமைப் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?
1. ஓரினப் பயிர்செய்கையாக இருத்தல்.
2. பரந்த நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படல்.
3. பரந்தளவிலான சந்தை வசதிகள் இருத்தல்.
4. பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு நுகரப்படல்.
20. கோதுமைப் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?
1. நவீன தொழினுட்ப முறைகள் கையாளப்படல் (மரபணுத் தொழினுட்பம்,
மட்பாதுகாப்பு)
2. பாரியளவிலான இயந்திரப் பாவனை
3. அதிக விளைச்சல் தரும் புதிய கோதுமை இனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை (நொரின் 10)
பெருந்தோட்டப் பயிர்கள்
21. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை என்றால் என்ன?
பாரிய பெருந் தொட்டங்களில் சிறந்த முகாமைத்துவத்துடன் தொழிநுட்பத்திறன் மிக்க தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையாகும்.
22. பெருந்தொட்டங்களில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?
தேயிலை, இறப்பர், கரும்பு, பருத்தி, கோப்பி, கொக்கோ, தெங்கு
23. பெருந்தொட்டப்பயிர்செய்கையின் விசேட பண்புகள் எவை?
1. மிகப்பெரிய பெருந்தோட்டங்களையும் வர்த்தக அடிப்பிடையிலான
செயற்பாடுகளையும் கொண்டுள்ளன.
2. உள்நாட்டு, வெளிநாட்டு தொழிலாளர் என இரு பிரிவினர் பயன்படுத்தப்படுகின்றமை.
3. கைத்தொழில் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளமை.
4. ஏற்றுமதிப் பபயிர்களாகக் காணப்படுவதால் அந்நியச் செலாவணியின் மூலாதாரமாக உள்ளமை.
5. பெரும்பாலன நாடுகளில் பெருந்தோட்டப் பயிர்செய்கை வெளிநாட்டவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை.
தேயிலை
24. தேயிலைப் பயிரை கண்டுபிடித்தவர்கள் யார்?
சீனர்
25. தேயிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நாடுகளை குறித்துக் காட்டுக.
26. ஆசியாவிற்கு வெளியே தேயிலை பயிரிடப்படும் நாடுகள் எவை?
ஆபிரிக்கா – கென்யா, உகண்டா, தன்சானியா
தென் அமெரிக்கா – பிறேசில்
27. தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு சாதகமான காரணிகள் எவை?
1. வெப்பநிலை 150C – 270C
2. மழைவீழ்ச்சி 1900 – 5460 மில்லி மீற்றர்
3. களித்தன்மையான செம்பூரன் மண்
4. மென்சாய்வான பகுதிகள்
28. தேயிலைப் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?
1. நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக அறுவடை செய்யக்கூடிய பயிராக இருத்தல்
2. சிறிய, பெரிய தோட்டங்களாக விரிவடைந்துள்ளமை
3. சிறந்த முகாதை;துவம் கட்டுக்கொப்பான ஊழியர் ஒழுங்கமைப்பு உள்ளமை
4. தொழில்நட்பத்திறன் கொண்ட தொழிலாளர்கள் காணப்படுதல்
29. தேயிலைப் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?
1. விளைச்சலை அதிகரிக்க பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றமை
2. தேயிலைத் தண்டு மூலம் தேயிலை வளர்க்கப்படல்
3. பல்வேறு சுவையுடனும், கவர்ச்சியாகப் பொதி செய்யப்பட்டு சந்தைப்
படுத்தப்படுகின்றமை (மஞ்சட் தேயிலை, கறுப்புத் தெயிலை, பச்சைத் தேயிலை)
இறப்பர்
30. பிறேசிலில் ஒரு காட்டுப் பயிராக இருந்து பெருந்தோட்டப் பயிராக மாற்றம் பெற்ற பயிர் எது?
இறப்பர்
31. இறப்பரினை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற முடிவுப் பொருட்கள்?
1. வாகன உதிரிப்பாகங்கள்
2. விளையாட்டுப் பொருட்கள்
3. இலத்திரனியல் சாதனங்கள்
4. வீட்டுப்பாவனைப் பொருட்கள்
5. அலங்காரப் பொருட்கள்
32. இறப்பர் பயிர் செய்யப்படும் நாடுகளைக் குறித்துக் காட்டுக.
33. இறப்பர் பயிர்ச்செய்கைக்கு சாதகமான காரணிகள் எவை?
1. வெப்பநிலை 270C மேல்
2. மழைவீழ்ச்சி – 2000 மில்லி மீற்றர் வரை
3. செம்பூரான் மண் அல்லது கபுக் கலந்த செம்மண்
34. இறப்பர் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?
1. பாரிய தோட்டங்களில் பரவிக் காணப்படுகின்றமை.
2. ஊழியச் செறிவான பயிர்ச்செய்கையாகக் காணப்படுகின்றமை.
3. இறப்பர் மூலப்பொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை.
4. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருரதார விருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.
5. இறப்பர் பால் வெட்டுவதற்கும் சேகரிப்பதற்கும் மனித உழைப்பு
பயன்படுத்தப்படுகின்றமை.
35. இறப்பர் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?
1. புதிய தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமை(இறப்பர் பால் வெட்டவும், சேகரிக்கவும்)
2. இறப்பர் மூலப் பொருளுக்கான கேள்வி அதிகரித்தல் (வாகன உதிரிப்பாகங்கள்)
3. இறப்பர் மூலப் பொருளாகவும் முடிவுப்பொருளாகவும் ஏற்றுமதி செய்யப்படுதல்
4. செயற்கை இறப்பர் உற்பத்தி காரணமாக இறப்பர் உற்பத்தி நாடுகள்
பிரச்சினைகளை எதிர்கொள்கின்றமை
விலங்கு வேளாண்மை
36. தற்காலத்தில் விலங்கு வேளாண்மை முக்கியம் பெறுவதற்கான காரணங்கள் எவை?
1. உணவு மற்றும் பால்வகைகளைப் பெறுதல்
2. கைத்தொழிலுக்கான மூலப்பொருளைப் பெறுதல்
37. விலங்கு வேளாண்மையின் கீழ் வளர்க்கப்படும் மிருகங்கள் எவை?
பசு.மாடு, ஆடு, செம்மறி ஆடு, பன்றி, கோழி
38. விலங்கு வேளாண்மைக்கு சாதகமாக அமைந்த காரணிகள் எவை?
1. இடைவெப்ப வலயம் (அதிகளவில் பரம்பியுள்ளது)
2. நீர் வசதி
3. புல் நிலங்கள்
4. பயிற்றப்பட்ட தொழிலாளர்கள்
5. புதிய தொழினுட்பங்கள்
39. உலக மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்யும் பிரதான உணவு எது? பால்
40. உலகில் பால் பண்ணை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளை குறித்துக்காட்டுக.
41. பாற்பண்ணையின் விசேட பண்புகள் எவை? அண்மைக்காலப் போக்குகள்
1. உலகில் விருத்தியடைந்த நாடுகள் வர்த்தக ரீதியான பாற்பண்ணையின் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்கின்றமை.
2. அபிவிருத்தியடைந்த நாடுகள் பால் தொடர்பான சந்தையைக் கட்டுப்படுத்தும் போக்குக் காணப்படுகின்றது.
3. பாலைச் சேகரித்தல், போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், சேகரிக்கும் பாலின் அளவைக் கூட்டுதல் போன்றவற்றுக்கு விருத்தியடைந்த நுட்ப முறைகள் பின்பற்றப்படுகின்றமை.
4. திரவ நிலையிலான பால் மற்றும் உற்பத்திகளுக்கான சந்தைகள் விரிவடைந்தமை.
5. வெண்ணெய்கட்டி, பட்டர், யோகட் போன்ற பாலுடன் தொடர்புடைய உற்பத்திகள் அதிகரித்தமை.
No comments:
Post a Comment