Tuesday, November 1, 2022

தரம் 10 அலகு 04

இலங்கையின் விவசாயம்

01 விவசாய நாடாக இலங்கையின் இயல்புகள் எவை?

1 விவசாயத்திற்கு ஏற்ற சூழலைக் கொண்டது

2 விவசாயப் பொருளாதார நாடாக விளங்குகிறது.

3 இலங்கையின் பொருளாதாரமும், கலாசாரமும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

நெல்

02 சுதந்திரத்தின் பின்னர் நெற்பயிர்ச்செய்கை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை?

1 வறள் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்களை அமைத்தல்.

2 குளங்களை புனரத்தாரணம் செய்தல்.

3 நெற்பயிர்ச்செய்கையில் பசுமைப் புரட்சியின் செல்வாக்குக் காரணமாக நெல் வர்த்தகப் பயிராக மாற்றமடைந்துள்ளமை.

03 நெற்பயிர்ச்செய்கையின் முக்கியத்தவங்கள் எவை? (விசேட பண்புகள்)

1 நெல் இலங்கை மக்களின் பிரதான உணவாகும்.

2 உள்ளுர் வர்த்தகப் பயிராக முக்கியம் பெற்றுள்ளது.

3 நெல் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் பல சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

4 பல்வேறு கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்களை வழங்குகின்றது.

04 நெல் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?

போம்புவல, மகாஇலுப்பல்லம, பத்தலேகொட, ஹிங்குராங்கொட,

அம்பாந்தோட்டை