Tuesday, November 1, 2022

தரம் 10 அலகு 04

இலங்கையின் விவசாயம்

01 விவசாய நாடாக இலங்கையின் இயல்புகள் எவை?

1 விவசாயத்திற்கு ஏற்ற சூழலைக் கொண்டது

2 விவசாயப் பொருளாதார நாடாக விளங்குகிறது.

3 இலங்கையின் பொருளாதாரமும், கலாசாரமும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

நெல்

02 சுதந்திரத்தின் பின்னர் நெற்பயிர்ச்செய்கை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை?

1 வறள் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்களை அமைத்தல்.

2 குளங்களை புனரத்தாரணம் செய்தல்.

3 நெற்பயிர்ச்செய்கையில் பசுமைப் புரட்சியின் செல்வாக்குக் காரணமாக நெல் வர்த்தகப் பயிராக மாற்றமடைந்துள்ளமை.

03 நெற்பயிர்ச்செய்கையின் முக்கியத்தவங்கள் எவை? (விசேட பண்புகள்)

1 நெல் இலங்கை மக்களின் பிரதான உணவாகும்.

2 உள்ளுர் வர்த்தகப் பயிராக முக்கியம் பெற்றுள்ளது.

3 நெல் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் பல சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

4 பல்வேறு கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்களை வழங்குகின்றது.

04 நெல் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?

போம்புவல, மகாஇலுப்பல்லம, பத்தலேகொட, ஹிங்குராங்கொட,

அம்பாந்தோட்டை


05 நெற்பயிர்ச்செய்கைக்கு சாதகமான காரணிகள் எவை?

1 வெப்பநிலை 210C- 350C

2 மழைவீழ்ச்சி – 1900 மில்லி மீற்றர்

3 ஈரத்தன்மையான வண்டல் மண்

4 விதைக்கும் காலத்தில் ஈரலிப்பும் அறுவடைக் காலத்தில் வரட்சியும்

06 இலங்கையின் பிரதான நெல் உற்பத்தி மாவட்டங்கள் எவை?

அனுராதபுரம், பொலநறுவை, குருநாகல், காலி, அம்பாறை, மட்டக்களப்பு

07 நெற்பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?

1 நெல் ஆராய்ச்சி நிறுவனங்காளல் பல்வேறு ஆராய்ச்சிகள்

மேற்கொள்ளப்படுவதன் மூலம் புதிய நெல்லினங்கள் அறிமுகம்

2 விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படல்

3 நீர் வழங்கலுக்கான வசதிகள் விரிவடைந்துள்ளமை.

4 நெல் மூலப்பொருளிலிருந்து பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுதல் (அரிசி, பிஸ்கட், அரிசிமா, நூடில்ஸ்)

08 இலங்கையில் நெல் உற்பத்தி வலயங்களையும் அவற்றின் இயல்புகளையும் தருக?

வலயம்

மாவட்டங்கள்

இயல்புகள்

வரண்ட வலயம்

அனுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம்

·         சிறுபோகம், பெரும்போகம் ஆகிய இரு போகங்களிலும் சில இடங்களில் இடைப்போகத்திலும் நெல் பயிரிடப்படுகின்றது.

·         மழைநீரும், ஏனைய நீர் விநியோக முறைகளும் பயன்படுகி;ன்றன.

·         ஒவ்வொரு அலகுகளுக்கான அறுவடை அதிகரிப்பால் ஏக்கரக்கான விளைச்சல் அதிகரித்துள்ளது.

·         அதிகளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இடைமாறு வலயம்

குருநாகல், பதுளை, மாதடதளை, மொனாராகலை, மாத்தறை

·         மழைநீரும், ஏனைய நீர் விநியோக முறைகளும் பயன்படுகி;ன்றன.

·         ஒவ்வொரு அலகுகளுக்கான அறுவடை அதிகரிப்பால் ஏக்கரக்கான விளைச்சல் அதிகரித்துள்ளது.

·         அதிகளவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈர வலயம்

 

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, கம்பஹா

 

·         நதிக்கரைகளிலும் தாழ்வான பிரதெசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றமை

·         பிரதானமாக மழைநீரின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது.

·         உலர் வலயத்துடன் ஒப்பிடும் போது விளைச்சல் குறைவானதாகும்.

·         சிறிய நிலங்களில் நெல் பயிரிடப்படும்.

·         அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும்

மலைப்பகுதிகள்

 

கண்டி, நுவரேலியா, மாத்தளை

 

·         படிமுறை அமைப்பில் மேற்கொள்ளப்படுகின்றமை.

·         நுவரெலியாவில் மிகக் குறைந்தளவு நெல் பயிரிடப்படுகின்றமை.

·         ஒவ்வொரு அலகு நிலத்திலிருந்தும் குறைந்தளவு விளைச்சல் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.


தேயிலை

09 இலங்கைக்குத் தெயிலையை அறிமுகப்படுத்தியவர் யார்?

ஜேம்ஸ் டெய்லர்(1839)

10 தேயிலை பெருந்தோட்டப் பயிராகப் பயிரிடப்பட்ட இடம் எது?

லூல் கண்டுரா(1867)

11 தேயிலை உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களின் வகைகள் எவை?

1 உயர் நிலத்தேயிலை - 1220 மீற்றருக்கு மேற்பட்ட உயர் நிலங்கள்

2 மத்திய நிலத் தேயிலை - 610 மீற்றர் - 1220 மீற்றருக்கு இடைப்பட்டது.

(கண்டி, மாத்தளை, பதுளை)

3 தாழ்நிலத் தேயிலை - 610 மீற்றருக்கு குறைந்த உயரம் (மாத்தறை, காலி,

அம்பாந்தோட்டை, )

12 தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

தலவாக்கொல்லை

13 தேயிலைப் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?

1 சிறிய மற்றும் பெரிய தோட்டங்களில் பயிரிடப்படுதல்

2 உள்ளுரிலும், சர்வதேசத்திலும் சந்தைகள் காணப்படுதல்

3 கொள்ளவனவு செய்யும் நாடுகளாக ஈரான், ஈராக், ஐக்கிய அரபுக் குடியரசு,

சிரியா

14 தேயிலைப் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?

1 சிறுதேயிலைப் பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளமை.

2 இலங்கைத் தேயிலைச் சபை

3 பயிற்றப்பட்ட தொழிலாளர்

4 விரைவான பொக்குவரத்து சேவைகள்

5 தேயிலை பல்வேறு வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படல்

(பத்சைத்தேயிலை, கறுவா தேயிலை, ரான் தேயிலை, உடனடித் தேயிலை)

15 உலகில் உயர்தரத் தேயிலையை உற்பத்தி செய்யும் முக்கிய நாடு எது?

இலங்கை

தென்னை

16 தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் எவை?

உணவுப்பொருட்கள், குடிவகை, அலங்காரப் பொருட்கள், தளபாடம்,

கைப்பணிப்பொருள்

17 தென்னைக்கு சதமாகமான காரணிகள் எவை?

1 வெப்பநிலை 200C– 270வரை

2 மழைவீழ்ச்சி 2000 – 2500 மி.மீற்றர்

3 உவர் தன்மையா மண்

18 தென்னை முக்கோண வலயத்தினுள் அடங்குபவை எவை?

கொழும்பு, குருநாகல், சிலாபம்

19 சிறு தென்னை முக்கோண வலஙயங்கள் எவை?

ரன்ன, மிதிதெனிய, தங்காலை

20 இலங்கையில் பயிரிடப்படும் பயிர்களுள் 28 சதவீதம் வரையான நிலப்பரப்பில்

பயிரிடப்படும் பயிர் எது? 

தென்னை

21 தென்னை ஆயராச்சி நிலையங்கள் உள்ள இடம்?

லுணுவில, எம்பிலிப்பிட்டிய

22 தென்பைப் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?

1 இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் இணைந்த தாவரம்

2 அனைத்து மாவட்டத்திலும் வீட்டுத்தோட்டப் பயிராகப் பயிரிடப்படுகின்றது.

3 உற்பத்தியின் பெரும்பங்கு உள்ளுர் நுகர்விற்குப் பயன்படுகின்றது.

4 நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நிலப்பரப்போடு ஒப்பிடும் போது

இரண்டாவது இடத்தில் உள்ளது.

23 தென்னைப் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?

1 உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்கள் விரிவடைந்தமை.

2 தொழிலாளர்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றமை.

3 ஆராய்ச்சி நிலையங்களின் சிறந்த செயற்பாட்டால் தெங்கு உற்பத்தி

நாடுகளின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

இறப்பர்

24 இலங்கையில் முதலாவது இறப்பர் மரத்தை நட்டவர் யார்? எங்கே நடப்பட்டது?

1890இல் ஹென்றி விக்கெம்பி, கம்பஹாவின் கெனரத்கொட பூங்கா

25 இறப்பர் உற்பத்தி இடங்கள் எவை?

கேகலை, களுத்தறை, இரத்தினபுரி, கொழும்பு

26 புதிதாக இறப்பர் பயிரிட நடவடிக்கையெடுக்கப்படடுள்ள இடம் எது?

வவுனியா, முல்லைத்தீவு

27 இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

அகலவத்த

28 இறப்பர் பயிர்ச்செய்கையின் விசேட பண்புகள் எவை?

1 பயிற்றப்பட்ட தொழிலாளர்

2 போக்குவரத்து வசதிகள்

3 உள்ளுர், வெளியூர் சந்தைகள்

4 வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளல்

29 இறப்பர் பயிர்ச்செய்கையின் அண்மைக்காலப் போக்குகள் எவை?

1 மழை காலங்களில் இறப்பர் பால் எடுப்பதற்கு அங்கிககள் வழங்கப்படல்

2 பயிரிடுவோருக்கான அறிவுறுத்தல் மற்றும் விரிவாக்கல் சேவைகள்

வழங்கப்படல்

3 ஒஸ்ரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி

செய்யப்படுகின்றது.

சிறு ஏற்றுமதிப் பயிர்

30 சிறு ஏற்றுமதிப் பயிர்கள் என்றால் என்ன?

பாரம்பரிய பிரதான வர்த்தகப் பயிர்களை விடச் சிறு அளவில் ஏற்றுமதிக்காக

உற்பத்தி செய்யப்படுகின்ற பயிர்களாகும்.

31 இலங்கை அரசு சிறு ஏற்றுமதிப் பயிர்கள் மீது கவனம் செலுத்திய ஆண்டு எது?

1980 பின்

32 இதற்கான காரணங்கள் எவை?

1 பாரம்பரிய ஏற்றுமதிப் பயிர்கள் விலைத் தளம்பலுக்கு உட்படுகின்றமை.

2 தெயிலை, தென்னை, இறப்பர் போன்ற மரபு ரீதியான ஏற்றுமதியில்

தங்கியருப்பது முழுமையாகச் சாத்தியமற்றதாக இருந்தமை.

3 ஊடு பயிர்களாக சிறு ஏற்றுமதி;ப் பயிர்களை பயிர்செய்ய முடிந்தமை.

4 வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடிந்தமை

5 உலகச் சந்தையில் சிறு ஏற்றுமதிப் பயிர்களுக்கான கேள்வி அதிகரித்தமை.

33 சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

1972

34 சிறு ஏற்றுமதிப் பயிர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பயிர்கள் எவை?

பூக்கள், காய்கறிகள், மளிகாய்கள், வெற்றிலை, அலங்காரத் தாவரங்கள்

35 சிறு ஏற்றுமதி பயிர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

மாத்தளை

36 சிறு ஏற்றுமதிப் பயிர்களையும் அவை உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களையும் அட்டவணைப்படுத்துக?

சிறு ஏற்றுமதிப் பயிர்

பரந்துள்ள பிரதேசம்

கறுவா

 

நீர்கொழும்புமாத்தறை வரையான கடற்கரையோரம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை

கோப்பி

 

களுத்துறை, இரத்தினபரி, கேகாலை, கம்பஹா

மிளகு

மாத்தளை, கண்டி, கேகாலை

ஏலம்

 

கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை

கராம்பு

மாத்தளை, கண்டி, கேகாலை

சாதிக்காய்

மாத்தளை, கண்டி, இரத்தினபுரி

முந்திரி

மன்னார், அம்பாந்தோட்டை, புத்தளம்

சித்திரநெல்லா

மாத்தறை, அம்பாந்தோட்டை

பூக்கள்

நுவரெலியா? பதுளை, பண்டாரவளை


37 மகாவலி அபிவிருத்தி வலயத்தில் வீட்டுத் தோட்டப் பயிர்களாகப் பயிரிடப்படுபவை எவை?
வெள்ளரி, தர்பூசணி, வாழைக்கழம், சோளம், பூக்கள், அலங்காரத் தாவரங்கள்
மரக்கறிப் பயிர்ச்செய்கை
38 இலங்கையில் பயிரிடப்படும் மரக்கறி வகைகளின் விசேட பண்புகள் எவை?
1 இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் பயிர் செய்யப்படக் கூடியவை
2 நிலத்தின் சிறிய பகுதியில் கூட வியாபாரப் பயிராகவோ அல்லது உள்ளுர்ப்
பயிராகவோ அல்லது பயிருக்கு இடையிலே ஊடு பயிராகவோ விளைவிக்கலாம்.
39 ஆரம்ப காலத்தில் காணப்பட்ட விசேடமான பிரதேசங்கள் எவை?
1 வறண்ட வலயம் - முருங்கைக்காய், பூசணிக்காய், பறங்கி, தக்காளி,
கத்தரி
2 ஈர வலயம் - வெண்டைக்காய், பயற்றங்காய், புடோலங்காய்,
பீர்க்கங்காய்
3 மலைநாடு - லீக்ஸ், கோவா, போஞ்சி, கரட், நோக்கோல், பீட்ரூட்
40 மரக்கறிப் பயிர்களின் அண்மைக்காலப் போக்குகள் எவை?
1 தொழினுட்ப முன்னேற்றத்துடன் மலைநாட்டு மரக்கறிகள் பல பிரதேசங்களின் பயிரிடப்படுகின்றமை.
2 சிறந்த முகாதை;தவத்தின் கீழ் வெலிமடை, பண்டாரவளை, பதுளை,
நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நோக்கில் பயிர்ச்செய்கை
மேற்கொள்ளப்படுகின்றது.
3 அதிகளவு தொழிலாளர்கள் வேலைக்கமர்தப்பட்டுள்ளமை.
4 பயிர் செய்கைகளுக்கான உரம் விலங்குப் பண்ணைகளிலிருந்து
பெறப்பட்டுள்ளது.
5 பதுளை, மாத்தளை, கண்டி, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், யாழ்ப்பாணம்
போன்ற மாவட்டங்களின் உள்ளுர், வெளியூர் சந்தைக்காக மரக்கறிகள்
பெரிய அளவில் பயிரிடப்படுகிறது.
பழப்பயிர்கள்
41 வர்த்தக நோக்கில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?
வாழை, அன்னாசி, மாம்பழம், கொடித்தொடை, திராட்சை, பப்பாசி, தோடை,
ஆனைக்கொய்யா
42 பின்வரும் பயிர்கள் பயிரிடப்படும் பிரதேசங்கள் எவை?
1 வாழை - அம்பாந்தோட்டை, மொனராகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம்
2 பியர்ஸ், திராட்சை, ஸ்ரோபரி - நுவரேலியா, பதுளை
43 இலங்கையிலிருந்து பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் முறைகள் எவை?
பழங்கள், துண்டுகளாக்கப்பட்ட பழங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள்,
நீரகற்றப்பட்ட பழங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள்
44 விலங்கு வேளாண்மையில் கவனம் செலுத்தப்படுவதற்கான காரணங்கள் எவை?
1 மக்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தல்
2 கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல்.
3 விவசாயத்திற்குத் தேவையான உரங்களை வழங்குதல்.
4 அந்நியச் செலாவணியை உழைத்தலும், சேமித்தலும்
5 விவசாயச் சமூகங்களுக்கு மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொடுத்தல்.
விலங்கு வேளாண்மை
45 பால் பண்ணை உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டமைக்கான காரணங்கள் எவை?
1 இறக்குமதி செய்யப்படும் பாற்பொருட்களுக்குச் செலவிடுகின்ற பணத்தை
சேமித்தல்.
2 இலங்கை மக்களின் போசனை மட்டத்தை மேம்படுத்தல்.
46 மந்தை வளர்ப்பு மேற்கொள்ளப்படும் இடங்கள் எவை?
நுவரெலியா, பதுளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை,
அனுராதபுரம்
47 காலநடை ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் எவை?
அம்பேவெல, கனன்வில, வல்பிட்ட
48 ஆராய்ச்சி நிலையங்களால் வழங்கப்படும் சேவைகள் எவை?
1 புதிய பசு இனங்கள் அறிமுகப்படுத்தப்படல்
2 புதிய புல்லினங்கள் அறிமுகம்
3 தேவையான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படல்
49 பால் தரும் பசுக்களை பரிமாறிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு எது?
மீவனபலன(பசும்பால் வளம த்திய நிலையம்)
50 அண்மைக்காலத்தில் முக்கியம் பெற்றுள்ள பால் உற்பத்திகள் எவை?
நெய், பால்மா, பொதி செய்யப்பட்ட பசும்பால், திரவப்பால், தயிர், கிருமி நீக்கிய பால், ஆடை நீக்கிய பால், வெண்ணெய், பாற்கட்டி, ஐஸ்கிறிம், யோக்கட்
மீன்பிடிக் கைத்தொழில்
51 இலங்கையின் மீன்பிடிக்கைத்தொழிலின் விருத்தியில் பங்களிப்புச் செய்யும் காரணிகள் எவை?
1 இலங்கை சமுத்திரத்தினால் சூழப்பட்ட தீவாக இருத்தல்
2 தீவைச்சுற்றி நீண்ட கடற்கரை காணப்படுதல்.
3 பரந்த கண்டமேடைகளைக் கொண்டிருத்தல்.
4 குடாக்கள், கடல்நிரேரிகள், துறைமுககங்கள் காணப்படுதல்
5 ஆறுகள், கால்வாய்கள், அரவிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றன
காணப்படுதல்.
52 இலங்கையைச் சூழவுள்ள கடல் வலயங்கள் எவை?
1 ஆள்புலக் கடலெல்லை – 12 கடல்மைல் வரையில்
2 அண்மைவலயம் - 12 – 24 கடல்மைல் வரையில்
3 தனித்துவமான பொருளாதார வலயம் - 200 கடல்மைல் வரை
53 மீன்பிடிக் கைத்தொழிலின் முக்கியத்துவங்கள் எவை?
1 மக்களின் உணவிற்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றது
2 மீன்பிடிக் கைத்தொழிலுக்காக பரந்த உள்ளுர், வெளியூர் சந்தை வாய்ப்பு
3 வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருகின்றமை
4 அந்நியச் செல்வணி பெற்றுக்கொள்ளப்படுகின்றமை
5 மீன்பிடிக்கைத்தொழிலை விருத்தி செய்வதற்கான வளங்கள்
காணப்படுகின்றமை.
54 இலங்கையின் மீன்பிடிக் கைத்தொழிலின் பிரிவுகள் எவை?
1 கடல்நீர் மீன்பிடி
2 நன்நீர் மீன்பிடி
3 உவர் நீர் மீன்பிடி
55 கடல்நீர் மீன்பிடிக்கைத்தொழில் மேற்கொள்ளப்படும் வலயம் எது?
வரையறுக்கப்பட்ட பொருளாதார வலயம்
56 கடல்நீர் மீன்பிடிக் கைத்தொழிலின் வகைகள் எவை?
1 கடற்கரையோரம் சார்ந்த கடல் அல்லது கண்டமேடையில் இடம்பெறும்
மீன்பிடி
2 ஆழ்கடல் மீன்பிடி
57 ஆழமற்ற கடலில் மீன்கள் அதிகம் இரப்பதற்கான காரணங்கள் எவை?
1 மீனின் உணவாகிய பிளாங்ரன் அதிகம் காணப்படுகின்றமை
2 ஆறுகள், அருவிகள் கால்வாய்களால் கொண்டு வரப்படுகின்ற சேதன
உணவுத் துணிக்கைகள் கரையோரப் பகுதிகளில் படிவு செய்யப்படுகின்றமை.
3 சமுத்திர நீரோட்டத்தினால் கடலின் அடியில் உள்ள மீன் உணவு நீரின்
மேற்பரப்புக்கு எடுத்து வரப்படுகின்றமை.
58 கரையோரப் பகுதிகளில் காணப்படும் மீன்கள் எவை?
சாலை, நெத்தலி, ஹீருல்ல, எற்றாவலை, சூடை, முல்லவர், அலகொடுவா
59 ஆழ்கடலில் காணப்படும் மீனினங்கள் எவை?
தலபத்து, தொரா, மோரா(சுறா0, கொப்பரா, கெலவல்ல
60 ஆழ்கடல் மீனிபிடித்தலில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எவை?
கரைவலை, பரப்பும் கரையோர வலை, முப்பரிமாண வலை, இழுவை வலை,
இயந்திரப் படகு, நீண்ட நாட்களிற்கான படகு
61 நன்னீர் மீன்பிடி மேற்கொள்ளப்படும் இடங்கள் எவை?
குளங்கள், சிறுகுளங்கள், ஆறுகள், கால்வாய்கள்
62 நன்னீரில் வாழும் மீனினங்கள் எவை?
லூலா, கனயா, மகுரா, கவாய்யா, கொரலியா, கொடயா, ஹீங்கா, மஸ்பெத்தியா
63 இன்று நன்னீரில் வளர்க்கப்படும் மீனினங்கள் எவை?
கிராஸ்காப், பிக்கெட்காப், சில்வர்காப், கட்லா, ரொகு, திலாப்பியா
64 இலங்கையின் கடற்கரையோர நீளம் எவ்வளவு? 
1760 கிலோ மீற்றர்
65 உவர் நீர் மீன்பிடித்தொழில் இடம்பெறும் இடங்கள் எவை?
யாழ்ப்பாணம், புத்தளம், முந்தல், சிலாபம், நீர்கொழும்பு, அறுகம்குடா
66 இலங்கையின் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் எவை?

பிரச்சினைகள்

;

அவற்றில் உள்ளடங்கும் உப பிரச்சினைகள்

நிலப்பயன்பாடு சார்ந்த பிரச்சினைகள்

;

·         நிலப்பற்றாக்குறையும் நிலம் துண்டாடப்படுதலும்

·         விவசாய நிலங்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல்

·         ஒரே நிலத்தில் நீண்டகாலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதால் விளைச்சல் குறைவடைதல்

·         சனத்தொகை அதிகரிப்பினால் வீடு கட்டுவதற்கும், ஏனைய அபிவிரத்தி நோக்குகளுக்காகவும் நிலம் பயன்படுத்தப்படல்

உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள்

 

·         பழமை வாய்ந்த நிலங்களின் பயன்பாட்டினால் விளைச்சல் குறைவடைதல்.

·         நிலத்துண்டாடலால் இயந்திரப் பாவனையை மேறகொள்ள முடியாமை

·         ஏக்கருக்கான விளைச்சல் குறைவடைந்தமை

·         வரண்ட வலயப் பிரதேசங்களில் நீர் பற்றாக்குறை, ஈரவலயங்களில் மேலதிக நீர் காணப்படல்

·         உரங்களின் விலையேற்றம்

வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள்

 

·         உற்பத்தியைக் கொள்வனவு செய்கின்ற மத்திய நிலையங்கள் போதியளவு இல்லாமை.(நெல், மரக்கறி)

·         இடைத்தரகர்களின் செயற்பாட்டினால் விவசாயிகளின் வருமானம் குறைவடைதல்.

·         உள்ளுர், சர்வதேச சந்தையில் ஏற்படும் விலைத் தளம்பல்

·         பிரதியீட்டுப் பொருட்களால் ஏற்படுகின்ற போட்டின் தன்மைகள்

·         வெளிநாடுகளுடனான போட்டி

சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள்

 

·         பூச்சிகளிலிருந்து நோய்களையும் தொற்று நொய்களையும் எதிர்கொள்ளல்

·         வெள்ளப்பெருக்கு, மண்வரிவு, வரட்சி என்பவற்றினால் பயிர்களுக்கு தீங்கு ஏற்படுதல்.

·         சூறாவளி, சமுத்திர நீரோட்டங்கள், சுனாமி காரணமாக மீன்பிடிக் கைத்தொழிலுக்குப் பிரச்சினைகள் உருவாதல்

·         உரம், கிருமிநாசினிகள், என்பவற்றினால் நீர், நிலம், வளி என்பன மாசடைதல்

·         சூழற் தொகுதியின் நிலைத்திருப்பிற்கு அவசியமான தாவரங்களும் விலங்குகளும் அழிவடைதல்


67 விவசாயத்தில் காணப்படும் நவீன போக்குகள் எவை?

நவீன போக்குகளின் வகை

உட்பிரிவின் முன்னேற்றங்கள்

 

உற்பத்தி சார்ந்த போக்குகள்

 

·         உற்பத்தியை அதிகரிப்பதற்காக மானியத்தினைப் பெற்றுக் கொடுத்தல்.

·         விவசாய உற்பத்திகளை பன்முகப்படுத்தல்

·         உள்நாட்டு நுகர்வு அதிகரித்தல்

·         விவசாயப் பயிர்களுடன் தொடர்புடைய ஊடு பயிர்களை அறிமுகப்படுத்தல். தென்னைஅன்னாசி, வெற்றிலை, கொடித்தொடை. இறப்பர் - கறுவா, கோப்பி, மிளகு

·         ஆராய்ச்சி நிறுவனங்கள் வெள்ளம் வரட்சியை எதிர்க்கக்கூடிய புதிய விதைகளை அறிமுகப்படுத்தின.

·         புதிய நிலங்களை பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தல்.

·         (இறப்பர் - வவுனியா, முல்லைத்தீவு)

தொழினுட்பம் சார்ந்த போக்குகள்

·         விலங்கு வேளாண்மையில் இயந்திரமயமாக்கலை அதிகரித்தல்

·         குளைந்த அளவு பட்டை வெட்டி பால் சேகரிக்கும் புதிய முறை அறிமுகம்.

·         நவீன தொழில்நுட்பத்தினை உடைய இயந்திரங்களைப் பயன்படுத்தல்.(அறுவடை, நாற்று நடல், நெல் தூற்றுதல்)

வர்த்தகம் சார்ந்த நவீன போக்குகள்

·         நுகர்வோரைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமாக விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளல்.

·         புதிய பொதியிடல் முறையைப் பயன்படுத்தல்.

·         வர்த்தக உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் எழுச்சி

விவசாயத்திற்கான அரச ஆதரவு

 

·         ஏற்றுமதி வரிச்சலுகை வழங்கல்

·         சந்தைச் சேவைகளை விரிவாக்கல்

·         உரமானியம் வழங்கல்(நெல், தேயிலை, தென்னை, இறப்பர்)

·         ஓய்வூதியத்திட்டம், காப்புறுதித் திட்டன் என்பவற்றை அறிமுகப்படுத்தல்

·         பயிற்சி நிலையங்களை அமைத்தல்(கன்னொறுவ, பட்டஅத்த இடங்களில் விவசாய தொழில் பூங்கா)

·         ஏற்றுமதிக் கிராமங்களை ஏற்படுத்தல். (நெல் - பொலநறுவை, குருநாகல், முந்திரிதம்பதெனிய, வெற்றிலைகட்டுகம்பொல, மிளகாய் - ராஜங்கனை)


68 இலங்கைப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவங்கள் எவை?
1 விவசாயத்துறை மொத்த தேசிய உற்பத்தியில் 11.1 சதவீதமாக உள்ளது
2 ஏற்றுமதி வருமானத்தில் 24 சதவீதமாக உள்ளது.
3 விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்பில் 31 சதவீதமாக உள்ளது.
4 நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி விவசாயத்திற்குப் பயன்படல்.
5 உணவு உற்பத்தி மற்றும் கைத்தொழில்களுக்கு மூலப்பொருட்களை
வழங்குதல்.
69 விவசாயத்துறையில் காணப்படும் வேலை வாய்ப்புச் சந்தர்ப்பங்கள் எவை?
1 தேயிலை, இறப்பர், தெங்கு பெருந்தோட்டங்கள்
2 நெற்பயிர்ச்செய்கை – அரிசிமா, நூடில்ஸ், இனிப்புப் பலகார உற்பத்தி
3 சிறு ஏற்றுமதிப் பயிர் - பதனிடல்
4 மீன்பிடி

No comments:

Post a Comment