Saturday, June 12, 2010

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு

சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.



   


         * ஆப்கானிஸ்தான்
   * வங்காளதேசம்
    *பூட்டான்
    *இந்தியா
    *மாலை தீவுகள்
     *நேபாளம்
     *பாகிஸ்தான்
                     * இலங்கை

உலகின் பெரிய பாலைவனங்கள்


உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்)

1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000

Thursday, June 10, 2010

புவியின் உட்கட்டமைப்பு



பூமியின் உட்பகுதி மற்ற திட கிரகங்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல்  பண்புகளை திடப்போருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது.

புவி



பூமி என உச்சரிக்கப்படும் சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கிரகம், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கிரகங்களில் ஒன்று.இதனை உலகம் , நீலக் கிரகம் ,மற்றும் டெரா என்றும் அழைப்பர். மனிதர்கள் உட்பட, பல்லாயிரக்கணக்கான, உயிரினங்கள் வாழும் இடம் வரை அகிலத்தில் புவியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக நாம் அறிவோம்.