Thursday, June 10, 2010
புவியின் உட்கட்டமைப்பு
பூமியின் உட்பகுதி மற்ற திட கிரகங்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் பண்புகளை திடப்போருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது.
பூமியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராயில்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கிமீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கிமீ வரையிலும் உள்ளது. பூமியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; டெக்டோனிக் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வலையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது. உட்கருவானது மற்ற பூமியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment