உலகளாவிய ரீதியில்
சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வது என்பது இன்று
பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. அதனால் உலகின் பாரிய அபிவிருத்தித்திட்டமிடல்கள் அனைத்திலும் நீர் என்ற விடையம் முதன்மைப்படுத்தியே நோக்கப்படுகின்றது. வெளிப்படையில்
இலங்கை போதிய நீர்வளம் கொண்ட நாடு போல் தோன்றினாலும் பருவகாலங்களுக்கு
ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய
சவால்கள் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. கிராமிய
மட்டங்களில் பாதுகாப்பான நீரினை பெறுவதில்...
தொடரும் இடர்களே அப்பகுதியின் வறுமை, உடல்நலக்கேடுகளின் அதிகரிப்புக்கு காரணமாகியிருக்கின்றன.
வேகமாக வளர்ந்துவரும் நகராக்கம் மற்றும் நீர் மாசடைவுகள் சுத்தமான நீரை பெறுவதில் இன்று பரிய சிக்கல்களை உருவாக்கியிருக்கின்றன. சுத்தமான குடிநீரினை பெற்றுக்கொடுத்தல், உடல்நலத்தில் சிறந்த முன்னேற்றம் என்பதில் இலங்கை இன்னமும்
போதிய நிலையினை அடைந்துவிடவில்லை. நீரின் நெறிமுறைப்படுத்தப்படாத முகாமைத்துவம் நீர் தொடர்பான உடல்நலக்கேடுகளுக்கும், இயற்கை இடர்களுக்கும் காரணமாகிவருகின்றது.
இன்றைய உலகில் நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு
என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. நதி வடிநிலங்கள் ஆட்சிப்பிரிவுகளால் குறுக்கிடப்படல், நீர் தொடர்பான பாரிய உட்கட்டுமான வசதிவாய்ப்பக்களை ஏற்படுத்துவதில் ஆட்சியாளர்களின் பின்னடைவு என்பனவற்றை இங்கு
குறிப்பிடலாம். இலங்கையின் மொத்த நீர் வளத்தின் 85 வீதத்தினை விவசாயத்துறை சுவீகரித்துக்கொள்கின்றது. இது 2025 இல் 70 தொடக்கம் 75 வீதமாக குறையலாம் என்கிறது இலங்கையின் விவசாய சக்தி வள அமைச்சு.
ஆனால் இன்று 6 வீதமாக இருக்கின்ற மனிதனின் நேரடி பாவனைக்கான நீரின் தேவை குறித்த
காலப்பகுதியில் மூன்று மடங்காக அதிகரிக்கும் எனப்படுகின்றது. இது இன்று (2009) 20 மில்லியனாக இருக்கின்ற நாட்டின் குடித்தொகையானது 2025 இல் 23 மில்லியனாக அதிகரிக்க இருப்பதனால்
ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைகளில்
ஒன்றே. இதே காலப்பகுதியில் இன்று 6 மில்லியனாக இருக்கின்ற நகர மக்கள் தொகையானது 13 மில்லியனாக அதிகரிப்பதுடன் சுதத்தமான குடிநநீரை பெறுவதில் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளலாம் எனவும் கூறப்படகின்றது.
நாட்டின் மொத்த கைத்தொழில் பயன்பாட்டுக்காக இன்று 5 வீதமாக உள்ள நீர் பாவனை 2025 இல் மூன்று
மடங்காக மாறும் என்கிறது விவசாய சக்கிவள அமைச்சு.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பிரச்சினைகள் காரணமாக நாட்டில் சிறுவர்களும், வறியவாகளுமே அதிக சவால்களை எதிர்கொள்வார்கள் லங்கா ஜனனியின் அறிக்கை. நாட்டில்
கடந்த 20 வருடங்களாக தரைநீர் பயன்பாட்டுக்கான கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளமையானது கிராமிய மட்டங்களில் நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வினை
பெற்றுத்தந்திரக்கிறது.
எனினும் ஒர் நிலைத்திருக்கக்கூடிய
அடிப்படையில் இக்கிணறுகளோ அன்றி நிலத்டி நீர் பயன்பாடோ வெற்றிகரமாக கொண்டுநடத்தப்படுகின்றதா என்பது
இன்றும் சந்தேகமே. விவசாயத்திற்கான நீர் பாசனம்
குறிப்பிடத்தக்களவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை சுற்றாடல் இயல்புகளை சீர் குலைக்காத வகையிலும் கழுவு நீரோட்டத்தினை மாசுபடுத்தாத அளவிலம் பயன்படுத்துதல் தொடர்பாக விவசாயிகள் வழிநடத்தப்படுகின்றார்களா
என்பது சந்தேகம் தான்.
No comments:
Post a Comment