Tuesday, June 28, 2022

தரம் 10 அலகு 07

 படங்களுக்கு ஓர் அறிமுகம்

01. படம் என்றால் என்ன?

      புவி பற்றிய புவியியல் தகவல்களைத் தட்டையான மேற்பரப்பில்                              அளவுத்திட்டத்தின் அடிப்படையில் எடுத்துக் காட்டுவதாகும்.

02. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட படங்களுள் மிகப் பழமையான படத்தினை

       உருவாக்கியவர்கள் யார், அது எவ்வாறு வரையப்பட்டிருந்தது?

        மொசப்பத்தேமியர்கள் (5000 வருடங்களுக்கு முன்னர்). தாம் வாழ்ந்த                      பிரதேசத்தைக் காட்டுவதற்கு பலகையொன்றில் களிமண்ணால் படத்தை           அமைத்திருந்தனர்.

03. தற்பொழுது புவியியல் தகவல்களை படமாக்குவதற்குப் பயன்படும்                      நுட்பமுறைகள் எவை?

        1. பூகோள இடைநிலைப்படுத்தல் முறைமை (GPS)

        2. புவியியல் தகவல் முறைமை(GIS)

        3. தொலை உணர்வு (RS)

04. படங்களில் காட்டப்படும் விடயங்கள் எவை?

        1. பௌதிக அம்சங்கள்

        2. பண்பாட்டு அம்சங்கள்

        3. கோள்கள்

        4. புவியின் உட்பாகம் பற்றிய தகவல்கள்

        5. அகலக்கோடுகள் 

        6. நெடுங்கோடுகள்


05. இடவிளக்கப்படத்தின் பிரதான அம்சங்கள் எவை?

        1. அளவுத்திட்டத்திற்கேற்ப தரைத்தோற்றத்தினைச் சுருக்கிக் காட்டுதல்.

        2. அமைவிடம் மற்றும் திசையினை மிகத் துல்லியமாகக் காட்டுதல்

        3. இடஞ்சார் தகவல்களை அதிகளவில் முன்வைத்தல்

        4. படங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு நிறங்கள், குறியீடுகளைப்                    பயன்படுத்தல்.

        5. புவியின் மேற்பரப்பைப் பொதுமைப்படுத்தல் 

06. படங்களின் வகைகள் எவை?

        1. கருப்பொருட் படம் 

        2. இடவிளக்கப்படம்

கருப்பொருட் படம்

07. கருப்பொருட் படம் என்றால் என்ன?

        ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றிய தகவல்களை மாத்திரம் முன்வைப்பதற்கு

        அமைக்கப்படும் படமாகும்.

08. கருப்பொருட் படங்களின் பயன்பாடுகள் எவை?

        1. படத்தின் மூலம் காட்டப்படும் தகவல்கள் இலகுவாகக் காணப்படுவதால்             சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.

        2. பல்வேறு வகையான கருப்பொருட் படங்களை ஒன்றுடன் ஒன்று                                 ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

        3 திட்டமிடலில் கருப்பொருட் படங்களின் பயன்பாடு உண்டு

         4 பிரதேச, இடம் சார்ந்த அல்லது பரப்புப் பாங்குகள் பற்றி நன்கு விளங்கிக்

            கொள்வதற்கான திறனைக் கொண்டிருத்தல்.

09. கருப்பொருட் படங்களின் வகைகள் எவை?

வகை

உள்ளடக்கம்

·         பௌதிக அம்சங்களைக் காட்டும் கருப்பொருள்

புவிச்சரிதவியல் தேசப்படம், தரைத்தொற்ற தேசப்படம், மண் தேசப்படம், நீரியல் தேசப்படம்

·         நிர்வாகக் கருப்பொருள் படம்

அரசியல் பிரிவுகளைக் காட்டும் படம், மாகாணத் தேசப்படம், மாவட்டத் தேசப்படம்

·         நிலப்பாயன்பாட்டு கருப்பொருட் படம்

பயிர்ச்செய்கை குடியிருப்பு

·         சனத்தொகை கருப்பொருட் படம்

குடிப்பரம்பல், குடி அடர்த்தி

·         வரலாற்று கருப்பொருள் படம்

புராதன நாகரிகப்படம், நாடுகாண் பயணப்படம், புராதன நகரங்களைக் காட்டும் படம்

·         செய்மதிக் கருப்பொருட்படம்

விமான ஒளிப்படங்கள், செய்மதிப் படங்கள்

இடவிளக்கப்படம்

10. இடவிளக்கப்படம் என்றால் என்ன?

    பௌதிகப் பண்பாட்டு அம்சங்களை உள்ளடக்கி திசை, அளவுத்திட்டம்,                அமைவிடம் போன்ற தேசப்பட அடிப்படைகளைப் பிரயோகித்து                                அமைக்கப்பட்ட படமாகும்.

11. இடவிளக்கப்படங்களின் பண்புகள் எவை?

      1. குறிப்பிட்ட பகுதி ஒன்றின் பல்வேறுபட்ட இடவிளக்கவியல் அம்சங்களை

            எடுத்துக்காட்டல்.

       2. சமவுயரக் கோடகளைப் பயன்படுத்தித் தரைத்தொற்ற அம்சங்களைக்

            காட்டுதல்.(மலைகள், பள்ளத்தக்குகள், சுவடுகள்)

        3. பண்பாட்டு அம்சங்களையும், பௌதிக அம்சங்களையும் காட்டுவதற்கு                நிறங்களையும் நியமக் குறியீடுகளையும் பயன்படுத்தல்.

12. இடவிளக்கவியல் படங்களின் பயன்பாடுகள் எவை?

        1. பௌதிக அம்சங்கள் மற்றும் அவற்றின் இடைத்தொடர்புகளை                                 விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.

        2. தரைத்தொற்றத்திற்கும் வடிகால் பாங்குகளுக்குமிடையில் காணப்படும்             தொடர்புகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல்.

        3. பௌதிக அம்சங்களுக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் இடையிலான

            தொடர்புகளை தெளிவுபடுத்துதல்.

13. இடவிளக்கவியல் பட அளவுத்திட்டங்களில் முக்கியமானது எது? 

        1:50,000 (நடுத்தர அளவு)

14. இவ்வளவுத் திட்டத்தின் அடிப்படையில் சமவுயரக் கோடுகளின் இடைவெளி     எவ்வளவு?

        20m

15. இலங்கையின் ஆகக்கூடிய நீளம் எவ்வளவு?

        432 கிலோ மீற்றர்(பருத்தித்துறை முனை – தெய்வேந்திரமுனை)

16. இலங்கையின் ஆகக்கூடிய அகலம் எவ்வளவு?

        244 கிலோ மீற்றர் (கொழும்பு – சங்கமன் கந்த முனை)

17. 1:50, 000 அளவுத்திட்ட முறையைக் குறிப்பிடுக?

      1cm = 50000cm

      1 cm = 500 m

      1cm =  ½ km

      1 X 2 = ½ X 2

      2cm =1 km (நிலத்தில் ஒரு கிலோமீற்றர் தூரம் படத்தில் 2                                                  சென்ரிமீற்றர்களாகக் குறிக்கப்படும்)

      நீளம் = 432 X 2 = 864 cm        அகலம் =224 X 2 = 448 cm

      இவ்வாறான பாரிய அளவுத்திட்டத்தை இலகுவாக்குவதற்கு இலங்கையை          92 படத்தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்தாளும் 40 கிலோ          மீற்றர் நீளமும் 25 கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாக அமையும்.

      எனவே ஒரு படத்தாளின் பரப்பளவு = நீளம் X அகலம்

      = 40km X 25km

      = 1000 சதுரக்km

     1: 50000 அளவுத்திட்டத்திற்கேற்ப படமாக்கப்பட்ட பகுதியின் பரப்பளவு

      = நீளம் X அகலம்

     40km X 2 X 25km X 2

     = 80cm X 50 cm

     = 4000 சதுர cm

18. இடவிளக்கப்படத்தின் மாதிரியை வரைந்து காட்டுக.

        


19.   1:50000 இடவிளக்கவியல் படத்தில் காட்டப்படும் விடயங்கள் எவை?

விடயம்

விடயம்

விடயம்

படத்தின் முகப்பிலுள்ள தகவல்கள்

பௌதிக அம்சங்கள்

நிலவுருவங்கள், ஆறுகள், காடுகள், புல்நிலங்கள், பற்றைக்காடுகள்,

பண்பாட்டு அம்சங்கள்

நிர்வாக எல்லைகள், வீதிகள், குடியிரப்புக்கள், பயிரிடப்பட்ட நிலங்கள்

புற எல்லைத் தகவல்கள

வெளி எல்லைகளின் மெல் ஓரம்

Aபடத்தின் வகை

Bபடத்தின் பெயர்

C படத்தின் இலக்கம

வெளி எல்லைகளின் கீழ் ஓரம்

அளவுத்திட்டம், திசை, அருகிலுள்ள படங்களை; காட்டும் வரைபடம், நிர்வாக எல்லைகளைக் காட்டும் வரைபடம்


20. அகலக் கோடுகளின் அடிப்படையில் இலங்கையின் அமைவிடம் யாது?
       5055’ – 9051’
21. நெட்டாங்கு அடிப்படையில் அமைவிடம் யாது?
      79042’ – 81052’
22. அகல, நெட்டாங்குகளின் அளவுத்திட்டம்?
     1= 60 கலை(60’) , 1 கலை = 60விகலை(60’’)
23. 1:50,000 அளவுத்திட்டத்தில் அகல, நெடுங்கோடுகள் எத்தனை கலை இடைவெளியில் குறிப்பிடப்படும்?
     5 கலை
24. இடவிளக்கவியல் படத்தில் காணப்படும் அடிப்படை அம்சங்கள் எவை?
      திசை, அளவுத்திட்டம், அமைவிடம், நிறங்களும் குறியீடுகளும், தலைப்பு
25. இடவிளக்கவியல் படத்தில் காட்டப்படும் திசை எது? 
       வடக்கு
26. 1.50,000 படங்களில் காட்டப்படும் திசைகள் எவை?
      உண்மை வடக்கு (TN-True North)                                
      காந்த வடக்கு (MN-Magnetic North)
      அளியடைப்பு வடக்கு (GN-Grid North)

உண்மை வடக்கு :- நட்சத்திர அடையாளம் ஒன்றுடன் முடிவடையும்.புவியியல்                                            வடக்கு எனவும் அழைக்கப்படும். பூகோளத்தில் வடக்கு                                                    மனைவு அமைவு பெற்றிருக்கும் திசையைக் காட்டும்.
காந்த வடக்கு :-       புவியின் காந்தப்புலத்தினை அடிப்படையாகக் கொண்டு
                                      காணப்படும்.அம்புக்குறியன்அரைவாசியுடன்  முடிவடையும்.
அளியடைப்பு வடக்கு :- முழுமையான அம்புக்குறி ஒன்றுடன் குத்தாகக்                                                       காணப்படும். கோட்டினால் காட்டப்படும். உண்மை                                                            வடக்கிற்கும் அளியடைப்பு வடக்கிற்கும் இடையே 30                                                        கோண வேறுபாடு காணப்படும்.

27. 1:50,000 அளவுத்திட்டம் காட்டப்படும் இரண்டு முறைகளும் எவை?
      1. நேர்கோட்டு அளவுத்திட்டம் 
      2. வகைக்குறிப்பின்ன அளவுத்திட்டம்
28. நேர்கோட்டு அளவுத்திட்டம் என்றால் என்ன?
      கோட்டின் மீது அளவுத்திட்டம் அமைக்கப்படும் போது நேர்கோட்டு                          அளவத்திட்டம் எனப்படும்.
29. நேர்கோட்டு அளவுத்திட்டத்தை வரைந்து காட்டுக.
        
        
        *வினவப்படும் வினாவிற்கேற்ப நேர்கோட்டு அளவுத்திட்டத்தினை                               வரையவேண்டும்.
30. நேர்கோட்டு அளவுத்திட்டம் வரையப்படும் படிமுறைகள்
    1. 10 சென்ரி மீற்றர் நீளமுடைய கோடு ஒன்றை வரைதல்.
    2. அதனை 2 சென்ரி மீற்றர் கொண்ட பகுதிகளாகப் பிரித்தல்.
    3. முதல் 2 சென்ரி மீற்றர் தவிர்த்து ஏனையவற்றிற்கு 0,1,2,3,4 என                                        இலக்கமிடுதல்.
    4. பூச்சியத்திலிருந்து இடது பக்கமாக 1 என இலக்கமிடுக.
    5.    0 இற்கும் 1 இற்கும் இடையிலன பகுதியை 2 மில்லி மீற்றர் கொண்ட 10 உப
        தொகுதிகளாகப் பிரிக்கவும்.
    6. கோட்டின் இரண்டு பக்க ஓரங்களிலும் km எனக் குறிப்பிடுக.
31 தூரத்தைக் கணித்தலுக்கு உதாரணம் தருக.
    10 சென்ரி மீற்றர் நீளமான வீதியின் நீளம் - 5 கிலோ மீற்றர் (2cm = 1km)
    7 கிலோ மீற்றர் வீதி படமாக்கும் போது - 14 சென்ரிமீற்றரில் காட்டப்படும்.
32 இடவிளக்கவியல் படத்தில் குறியீட்டு விளக்கம் காட்டப்படும் தலைப்புக்கள்         எவை?
1. எல்லைகளின் வகைகள் 
2. சுற்றுலாத் தகவல்கள் 
3. வடிகால்கள்
4. தரைத்தோற்றம் 
5. தாவரப் போர்வை 
6. ஏனைய அம்சங்கள்
7. வீதிகள் மற்றும் அதனுடன் இணைந்த அம்சங்கள்

33 நிறங்களும் அவற்றினால் குறிக்கப்படுபவையும்.

    

நிறம்

குறிப்பிபடப்டுபவை

நீலம்

ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், கடல்கள் போன்ற நீருடன் தொடர்புடையவை

மஞ்சள்

எல்லா வகையான வீட்டுத் தோட்டங்கள், சிறுவீதி

மஞ்சள் நிறப் பின்னணியில்

ஒவ்வோரு பயிருக்குமுரிய குறியீடு பச்சை நிறத்தில் காட்டப்படும்.

பச்சை

நேற்சேய்கை

சிவப்பு

பிரதான வீதிகள், நிர்வாக எல்லைகள், புகையிரத நிலையங்கள், பாடசாலைகள், நீதிமன்றங்கள்

கறுப்பு

புகையிரதப்பாதை, பாறை வெளியரும்பு, பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லை.

கபில நிறம்

குளங்களின் அணை, சமவுயரக் கோடுகள்.


34 பண்பாட்டு அம்சங்கள் என்றால் என்ன?
     மனிதனின் தலையீட்டினால் பௌதிக சூழலின் மீது                                                         கட்டியெழுப்பப்பட்டுள்ள அனைத்தும் பண்பாட்டு அம்சங்களாகும்.

35. வகைக்குறிப்பின்னம் என்றால் என்ன?
  • அளவுத்திட்டத்தின் ஒரு விகிதமாகக் குறிப்பிடுவது வகைக்குறிப்பின்னம் எனப்படும்.
  • இடவிளக்கப் படங்களில் வகைக் குறிப்பின்னம் 1 : 50 000 எனக் காட்டப்படும்.
  • இந்த அளவுத்திட்டத்தினை விகிதமாகக் காட்டுவதிலுள்ள விசேட அம்சம் என்னவெனில், இரு இடங்களுக்கும் இடையிலான உண்மையான தூரத்தினை அளவிடுவதற்கு உலகில் எந்தவொரு அளவீட்டு அலகினைப் பயன்படுத்துகின்ற நபருக்கும் அது இலகுவானதாக இருக்கும்.
  • அளவுத்திட்டத்தின்படி நிலப்பகுதியின் தூμத்தினையும், பμப்பளவையும் கணிப்பிட முடியும்.
  • 1 : 50 000 இடவிளக்கப் படங்களில் அளவுத்திட்டமானது படத்தின் புற எல்லையின் கீழ் ஓμத்தில் காட்டப்பட்டிருக்கும்.

1: 50,000 இடவிளக்கவியல் படத்தில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.




        

No comments:

Post a Comment