படங்களுக்கு ஓர் அறிமுகம்
01. படம் என்றால் என்ன?
புவி பற்றிய புவியியல் தகவல்களைத் தட்டையான மேற்பரப்பில் அளவுத்திட்டத்தின் அடிப்படையில் எடுத்துக் காட்டுவதாகும்.
02. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட படங்களுள் மிகப் பழமையான படத்தினை
உருவாக்கியவர்கள் யார், அது எவ்வாறு வரையப்பட்டிருந்தது?
மொசப்பத்தேமியர்கள் (5000 வருடங்களுக்கு முன்னர்). தாம் வாழ்ந்த பிரதேசத்தைக் காட்டுவதற்கு பலகையொன்றில் களிமண்ணால் படத்தை அமைத்திருந்தனர்.
03. தற்பொழுது புவியியல் தகவல்களை படமாக்குவதற்குப் பயன்படும் நுட்பமுறைகள் எவை?
1. பூகோள இடைநிலைப்படுத்தல் முறைமை (GPS)
2. புவியியல் தகவல் முறைமை(GIS)
3. தொலை உணர்வு (RS)
04. படங்களில் காட்டப்படும் விடயங்கள் எவை?
1. பௌதிக அம்சங்கள்
2. பண்பாட்டு அம்சங்கள்
3. கோள்கள்
4. புவியின் உட்பாகம் பற்றிய தகவல்கள்
5. அகலக்கோடுகள்
6. நெடுங்கோடுகள்