செயற்பாடு 1.1
- மிகப்பெரிய தொகுதியாகக் கருதப்படுகின்ற புவி மேற்பரப்பின் பரப்பளவு யாது?
- புவித்தொகுதி (Earth system) நான்கு உபதொகுதிகளை உள்ளடக்கியுள்ளது, அவை எவை?
- மேற்குறித்த நான்கு உப தொகுதிகளுக்கும் இடையில்காணப்படும் இடைத்தொடர்புகள் எவை?
- ஞாயிற்றுத் தொகுதியில் உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு கோளாகப் புவி சிறப்புற்று விளங்குவதற்குரிய காரணிகள் எவை?
- உயிர்ச் சூழலில் உள்ள மூலக்கூறுகள் எவற்றிற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன?
செயற்பாடு 1.1 விடைகள்
- 510 மில்லியன் சதுரக் கிலோ மீற்றர்கள்.
- 1.கற்கோளம் / நிலக்கோளம் (Lithosphere) 2.வளிமண்டலம்/ வளிக்கோளம் (Atmosphere) 3.நீர்க்கோளம் (Hydrosphere) 4.உயிர்க்கோளம் (Biosphere)
- நீர்க்கோளத்திலுள்ள நீர் ஆவியாக்கம் (Evaporation) மூலம் வளிக்கோளத்தில் சேர்கின்றது. மீண்டும் அந்நீர், படிவுவீழ்ச்சியாகப் புவியை வந்து அடைகின்றது நீர், வளி மற்றும் மண் ஒன்று சேர்வதால் உயிர்க் கோளத்திலே உயிர்ச் சூழல் உருவாக்கப்படுகின்றது. உயிர்ச் சூழலில் உள்ள மூலக்கூறுகள் நீர்க்கோளம், வளிமண்டலம் மற்றும் கற்கோளம் என்பனவற்றிற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
- உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வளி, நீர், சூரியசக்தி என்பவை காணப்படுகின்றமை.
- நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் கற்கோளம் என்பனவற்றிற்கு.
No comments:
Post a Comment