Tuesday, June 14, 2022

தரம் - 10 அலகு 1 || கற்கோளம் (நிலக்கோளம்)||

 செயற்பாடு 1.2

  1. கற்கோளம் கட்ட அமைப்பின் அடிப்படையில் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி உள்ளது அவை எவை?
  2. கற்கோளத்தின் அமைப்பில் இலக்கங்கள் குறிக்கும் பகுதிகளைப் பெயரிடுக.



          3.கற்கோளத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும்போது, பல்வேறு வழிகளில் அவை                     பாதிப்புக்களுக்கு உட்படுகின்றன அவற்றைப் பட்டியற்படுத்துக.
          4.கற்கோளத்தின் பயன்பாடுகள் மூன்றினைத் தருக.
          5.கற்கோளத்தினை வரையறைசெய்க.

செயற்பாடு 1.1 விடைகள்
1. 1.புவியோடு (Earth’s Crust)
    2.மேல் மூடி (Upper mantle)
2.  1.சமுத்திர ஓடு
     2.கண்ட ஓடு
     3.கற்கோளம்
     4.மேல் மூடி
3.   கனிய வளங்களைப் பெற்றுக் கொள்ளவதற்காக நிலங்களை அகழ்வதால் நிலம் தரமிழந்து             வருகின்றது.
      காடுகளை அழிப்பதனால் மண்ணரிப்பு அதிகரிக்கின்றது.
      மேற்பμப்பு நிலத்தோற்றம் மாற்றமடைகின்றது.
      தøμக்கீழ் நீர் மட்டம் மாற்றமடைகின்றது.
      வீடுகளிலிருந்தும், கைத்தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளால்                     கற்கோளத்தின் சில படைகளில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
       மாடிக் கட்டடங்கள் மற்றும் பாரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுவதனால் கற்கோளத்தின்          சமநிலை பாதிப்படைகின்றது.
4. உயிர் வாழ்க்கை
    பயிர்ச்செய்கை
    கைத்தொழில்
5.புவியின் ஓடு மற்றும் மேல் மூடியினை உள்ளடக்கிய வலயம் கற்கோளம்
எனப்படுகின்றது.

No comments:

Post a Comment