Monday, June 20, 2022

தரம் 10 அலகு 01

 புவியின் சேர்க்கை  

01 ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களுள் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் எது? 

    புவி 

02 புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கான காரணங்கள் எவை? 

  • சுவாசிப்பதற்குத் தேவையான வளி இருத்தல். 
  • நீர் இருத்தல் 
  • புவியீர்ப்புச் சக்தி இருத்தல் 
  • பொருத்தமான காலநிலை காணப்படல் 


புவியின் சேர்க்கை / புவியின் தொகுதிகள் 

03 புவியின் மேற்பரப்பின் பரப்பளவு எவ்வளவு? 

    510 மில்லியன் சதுர கிலோமீற்றர் 

04 புவித்தொகுதியில் உள்ளடங்கும் நான்கு தொகுதிகளும் எவை? 

    1 கற்கோளம் / நிலக்கோளம் 

    2 நீர்க்கோளம் 

    3 வளிக்கோளம் 

    4 உயிரிக்கோளம் 

05 புவித்தொகுதிகளுக்கிடையில் நிலவும் இடைத்தொடர்புகள் எவை? 

    1 நீர்க்கோளத்திலுள்ள நீர் நிலைகளில் இருந்தும் தாவரங்களிலிருந்தும் நீர்         ஆவியாகி வளிக்கோளத்தை அடைகின்றது. 

    2 மீண்டும் இந்நீரானத படிவு வீழ்ச்சி மூலம் புவியை வந்தடைகின்றது. 

    3 நீர், வளி, நிலம் சேர்வதனால் உயிர்க்கோளத்தின் உயிர்ச்சூழல் 

    உருவாக்கப்படுகின்றது. 


கற்கோளம் 

06 கற்கோளம் என்றால் என்ன? 

    புவியோடு மற்றும் மேல் மூடியினை உள்ளடக்கிய வலயம் கற்கோளம்                     எனப்படும். 

07 கற்கோளத்தில் அமைந்து காணப்படுபவை எவை? 

    1 கண்டங்கள் 

    2 சமுத்திரங்கள் 

08 கற்கோளத்தின் அடிப்படையில் கற்கோளத்தின் இரண்டு பகுதிகளும் எவை? 

        1.புவியோடு    (i.கண்ட ஓடு   ii.சமுத்திர ஓடு)

        2.மேல் மூடி

09 மனிதச் செயற்பாடுகளில் பெரும்பாலானவை இடம்பெறும் பகுதி எது? 

    கற்கோளம் 

10 மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்தும் கற்கோளத்தின் இரு வகையான வளங்களும் எவை? 

    1 உயிருள்ள வளங்கள் 

    2 உயிரறற் வளங்கள் 

11 கற்கோளத்தினால் மனிதன் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் எவை? 

    1 கனியவளங்களைப் பெற்றுக் கொள்ளுதல். 

    2 குடியிருப்புக்களை அமைத்தல் 

    3 விவசாய நடவடிக்கைகள் 

    4 கைத்தொழில் நடவடிக்கைகள் 

    5 சுற்றுலா நடவடிக்கைகள்  

12 கற்கோளத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தும் போது கற்கோளத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் எவை? 

    1 கனிய வளங்களைப் பெறுவதற்காக நிலங்களை அகழ்வதால் நிலம்                        தரமிழத்தல். 

    2 காடுகளை அழிப்பதால் மண்ணரிப்பு ஏற்படுதல். 

    3 மாடிக் கட்டடங்கள், பாரிய நீர்த்தேக்கம் என்பவற்றின் அமைப்பினால்                 சமநிலை பாதிக்கப்படுதல். 

    4 தரைக்கீழ் நீர் மட்டம் குறைவடைதல் 

    5 மேற்பரப்பு நிலத்தோற்றம் மாற்றமடைதல். 

13 சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனித நடவடிக்கைகள் எவை? 

    1 வீட்டுக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் முறையற்ற விதத்தில் 

    வெளியேற்றப்படுதல். 

    2 விவசாயத்தில் களைகொல்லிகள், கிருமிநாசினிகள், இரசாயன உரங்கள் 

    என்பவற்றைப் பபயன்படுத்தல். 

    3 வரையறையற்ற முறையில் வளங்களை அகழ்தல். 

    4 காடுகளை அழித்தல். 

    5 பாரிய அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாரிய நீர்த்தேக்கங்கள் என்பவற்றை 

    அமைத்தல். 

14 சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் எவை? 

    1 வீட்டுக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் முறையான விதத்தில் 

    வெளியேற்றப்படுதல். 

    2 விவசாயத்தில் இரசாயன பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல். 

    3 கனியங்களை அகழ்வது தொடர்பாக சட்டங்களை இயற்றுதலும் 

    நடைமுறைப்படுத்தலும். 

    4 காடுகளை அழித்தலை குறைத்தலும் மீள் வனமாக்கலும் 

    5 பாரிய அடுக்கு மாடிக் கட்டடங்கள், பாரிய நீர்த்தேக்கங்கள் என்பவற்றை             அமைக்கும் போது சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கவனத்தில்                         கொள்ளல். 

15 கற்கோளத்தின் கட்டமைப்பினை வரைந்து பகுதிகளைக் குறிப்பிடுக?


 

    வளிக்கோளம் 

16 வளிக்கோளம் என்றால் என்ன? 

    புவியைந் சூழ்ந்து காணப்படும் பல்வேறு வகையான வாயுக்களை                         உள்ளடக்கிய மெல்லிய படை வளிமண்டலமாகும். 

17 வளி மண்டலம் புவியுடன் இணைந்து காணப்படுவதற்கான காரணம் யாது? 

    புவியின் ஈர்ப்பு சக்தி 

18 வளி மண்டலத்தின் முக்கிய படை புவி மேற்பரப்பிலிருந்து எத்தனை கிலோ       மீற்றர் வரை பரந்துள்ளது? 

    120 கிலோ மீற்றர் 

19 மொத்த வளி உள்ளடக்கத்தில் 50வீத வாயுக்கள் புவி மேற்பரப்பிலிருந்து                 எத்தனை கிலோ மீற்றர் வரை பரந்துள்ளது? 

    5 – 6 கிலோ மீற்றர் 

20 வளி மண்டலத்தின் முக்கியத்துவங்கள் எவை? 

      1 உயிர்கள் சுவாசித்தலுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை வழங்குதல். 

      2 ஒளித்தொகுப்புச் செயற்பாட்டிற்குத் தேவையான காபனீரொக்சைட்டை           வழங்குதல். 

      3 புற ஊதாக்கதிர்கள் புவியை அடைவதைத் தடுத்தல். 

      4 படிவு வீழ்ச்சிச் செயற்பாடுகளுக்கு உதவுதல். 6 

21 வளி மண்டலத்தில் காணப்படும் முக்கிய வாயுக்களையும் அவற்றின்                     அளவுகளையும் குறிப்பிடுக? 

        நைதரசன் 78.09 

         ஒட்சிசன் 20.95 

         ஆகன் 0.93 

        காபனீரொக்சைட்டு 0.03 

22 மனிதச் செயற்பாடுகள் காரணமாக வளிமண்டலத்தை அடையும் மாசடைந்த வாயுக்கள் எவை? 

    1 காபனீரொக்சைட்டு 

    2 மெதேன் 

    3 காபன் மொனோ ஒக்சைட் 

    4 சல்பர் ஒக்சைட் 

23 வளி மண்டலத்தில் காணப்படும் பிரதான நான்கு படைகளும்                                     எவ்வடிப்படையில் பிரிக்கப்படுகின்றன? 

     1 உயரத்தின் அடிப்படையில் 2 வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் 

24 வளி மண்டலத்தில் காணப்படும் பிரதானமான நான்கு படைகளும் எவை? 

1 மாறன் மண்டலம் 

2 படை மண்டலம் 

3 இடை மண்டலம் 

4 வெப்ப மண்டலம் 

மாறன் மண்டலம் 







25 மாறன் மண்டலத்தின் முக்கிய இயல்புகள் எவை? 

    1 புவி மேற்பரப்பிலிருந்து 8 – 12 கி.மீவரைபரந்துள்ளது. 

    2 கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல ஒவ்வொரு 1000 மீற்றருக்கும்            6.40 ஊ வீதம் வெப்பம் குறைவடையும். இது வெப்ப நழுவு வீதம் எனப்படும். 

    3 படிவு வீழ்ச்சி, வெப்பநிலை, அமுக்கம், காற்று, ஈரப்பதன் முகில்களின் 

    உருவாக்கம் ஆகிய தோற்றப்பாடுகள் இடம்பெறுகின்றன. 7 

    4 உயிர்க்கோளத்தின் நிலைத்திருப்பிற்கு மிகவும் அவசியமானது. 

    5 இதன் உயர் எல்லைக்கு அருகில் சாதாரண விமானங்கள் பயணம்                             செய்யும். 

    6 இதன் மேல் எல்லை மாற்றரிப்பு எனப்படும். படை மண்டலம் 

26 படை மண்டலத்தின் முக்கிய இயல்புகள் எவை? 

    1 கடல் மட்டத்திலிருந்து 48 – 50 கி.மீற்றர் வரை பரந்துள்ளது. 

    2 மேலே செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரித்துச் செல்லும். 

    3 உயிர்க்கோளத்தின் நிலைத்திருப்பிற்குத் தேவையான ஓசோன் படை 20 –30 

        கி.மீற்றர் வரை பரந்துள்ளது. 

    4 இப்படை சூரியனிலிருந்து வருகின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிக்                 கொள்கிறது. 

    5 இப்பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பிற்கு ஒசோன் படை செல்வாக்குச்                செலுத்தும். 

    6 விண்கற்களில் பெரும்பாலானவை இப்பகுதியிலேயே அழிவடைகின்றது. 

    7 அதிவேக ஜெட் விமானங்கள் இப்பகுதியில் பயணம் செய்யும். 

    8 இதன் மேல் எல்லை படைத்தரிப்பு எனப்படும். 

இடை மண்டலம் 

27 இடை மண்டலத்தின் இயல்புகள் எவை? 

    1 கடல் மட்டத்திலிருந்து 80 கிலோ மீற்றர் உயரம் வரை பரந்துள்ளது. 

    2 உயரத்திற்கேற்ப வெப்பம் படிப்படியாகக் குறைவடையும். 

    3 நீராவி, தூசுத் துணிக்கைகள்ஈ முகில்கள் என்பன இல்லை. 

    4 வளி மண்டலத்தின் மிகத் தாழ்ந்த வெப்பநிலை காணப்படும். 

    5 மின்னியக்கச் செயற்பாடுகள் அதிகம் இடம்பெறும். 

    6 இதன் மேல் எல்லை இடைத்தரிப்பு எனப்படும். 

வெப்ப மண்டலம் 

28 வெப்ப மண்டலத்தின் இயல்புகள் எவை? 

    1 இதன் மேல் எல்லை 120 கிலோ மீற்றர் வரை பரந்துள்ளது. 

    2 உயர்திற்கேற்ப வெப்பநிலை விரைவாக அதிகரித்துச் செல்லும். 

    3 இப்பகுதி அதிக வெப்பத்தைக் கொண்டது. 

    4 இரவு பகல் வெப்பநிலையில் பாரிய வேறுபாடு காணப்படும். 

29 வளி மண்டலம் மாசடைவதற்குக் காரணமான மனிதச் செயற்பாடுகள் எவை? 

    1 கைத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகைகள் 

    2 வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் 

    3 அதிகளவில் இடம்பெறும் விண்வெளிப் பயணங்கள் 

    4 நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் செய்றபாடுகளை மெற்கொள்ளல். 

30 வளி மண்டலம் மாசடைவதைத் தடுக்கும் வழிகள் எவை? 

    1 கைத்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைக்                                       கட்டுப்படுத்தல். 

    2 புகைக்கும் வாகனங்களை தடைசெய்தல். 

    3 பாதுகாப்பான முறையில் விண்டிவளிப் பயணங்களை மேற்கொள்ளல். 

    4 நச்சு வாயுக்கள் சேர்வதைக் கட்டுப்படுத்துதல். 

நீர்க்கோளம் 

31 நீர்க்கோளம் என்றால் என்ன? 

புவி மேற்பரப்பில் பல்வேறு வடிவங்களில் (திண்மம், திரவம், வாயு) காணப்படும் அனைத்து நீர் நிலைகளும் நீர்க்கோளம் எனப்படும். 

32 புவியின் மொத்த நீரின் கொள்ளளவு எவ்வளவு? 

    1386 கியுபிக் கிலோமீற்றர் 

33 நீரின் முக்கியத்துவங்கள் எவை? 

    1 மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு 

    2 விவசாயம் 

    3 கைத்தொழில் 

    4 போக்குவரத்து 

    5 விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு 9 

34 புவியில் நீர் பரம்பியுள்ள முறைகள் எவை? 

    1 சமுத்திர நீர் - சமுத்திரம் மற்றும் கடல்கள் (97.5 வீதம்) 

    2 மேற்பரப்பு நீர் - ஆறுகள், கால்வாய், ஏரிகள், மற்றும் நீர்த்தேக்கங்கள் 

    3 தரை நீர் - தரைக்கீழ் நீர் 

    4 வளி மண்டல நீர் - வளிமண்டல ஈரப்பதன் 

    5 மண்ணீர் - மண்ணில் உள்ள நீர்) 

35 உலகில் உள்ள நீரில் மனிதனுக்குப் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு எவ்வளவு? 

    1வீதம் 

36 நீரின் தரம் குறைவடைந்து வருவதற்கான காரணங்கள் எவை? 

    1 கைத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நீருடன் கலத்தல். 

    2 விவசாயத்தில் கிருமி கொல்லிகள், களை கொல்லிகள் போன்ற இரசாயனப்     பொருட்கள் நீருடன் கலத்தல். 

    3 இறந்த விலங்குகளை நீரில் வீசுதல். 

    4 வாகனங்களை நீர் நிiலைகளில் கழுவுதல். 

    5 வீட்டுக் கழிவுகள் நீருடன் கலத்தல். 

37 நீர் மாசடைவதைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எவை? 

    1 கைத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நீருடன் கலத்தலை தடுத்தல். 

    2 விவசாயத்தில் கிருமி கொல்லிகள், களை கொல்லிகள் போன்ற இரசாயனப்     பொருட்களின் பாவனையைக் குறைத்தல். 

    3 இறந்த விலங்குகளை நீரில் வீசுதலைத் தவிர்த்தல். 

    4 வாகனங்களை நீர் நிiலைகளில் கழுவுதலைத் தடுத்தல். 

    5 வீட்டுக் கழிவுகள் நீருடன் கலத்தலைத் தடுத்தல் 10 

38 நீரியல் வட்டத்தில் இடம்பெறும் செயற்பாடுகள் எவை? 

    • படிவு வீழ்ச்சி - மழைவீழ்ச்சியும் உறைபனி வீழ்ச்சியும் 

    • வழிந்தோடுதல் - மேற்பரப்பில் வடிந்தோடல் (கழுவு நீரோட்டம்) 

    • ஊடு வடிதல் - புவியினுள் பொசிதல் மூலம் நீர் நிலக்கீழ் நீர் 

    • தேங்குதல் - நதி, ஓடை, குளம், ஏரி, கடல் 

    • ஆவியாதல் - மேற்பரப்பினிலுள்ள நீர் ஆவியாகி வளி மண்டலத்தில் 

    சேர்தல், தாவரங்களிலிருந்து நீர் ஆவியுயிர்ப்பின் மூலம் வளிமண்டலத்தில்         சேர்தல் 

• ஒடுங்குதல் - நீராவி திரட்சியடைந்து முகில்ஃ நீர்த்துளிகள் உருவாதல் 

உயிர்க்கோளம் 

39 உயிர்க்கோளத்தின் செயற்பாடுகளைத் பாதிக்கும் இரண்டு காரணிகளும்         எவை? 

    1 உயிருள்ள கூறுகள் - தாவரங்கள், விலங்குகள், பிரிகையாக்கிகள் 

    2 உயிரற்ற கூறுகள் - சூரியசக்தி, மண், நீர், காற்று) 

40 உயிர்க்கோளத்தின் எல்லைகள் எவை? 

    1 கற்கோளம் - தாவரங்களின் வேர்த் தொகுதிகள் மற்றும் மண் அங்கிகள் 

    ஆகியவற்றை உள்ளடக்கிய படை(மண்ணினுள் ஏறக்குறைய 2.5 மீற்றர்) 

    2 நீர்க்கோளம் - ஒளித்தொகுப்புச் செயற்பாட்டுக்குத் தேவையான சூரிய ஒளி     ஊடுருவுகின்ற பகுதி வரை 

    3 வளி மண்டலம் - பறவைகள் பறந்து செல்கின்ற ஆகக்கூடிய எல்லை(5000             மீற்றர்) 

41 மனிதனின் நிலைத்திருப்பிற்கு அவசியமான ஒளித்தொகுப்புச் செயற்பாடு எங்கு இடம்பெறும்? 

        உயிர்க்கோளம் 

42 உயிர்க்கோளத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மனிதச் செயற்பாடுகள் எவை? 

    1 வரையறையின்றி வளங்களைப் பயன்படுத்துதல். 

    2 பாரிய கட்டடங்களை அமைத்தல். 

    3 திண்மக்கழிவுகளை முறையற்ற விதத்தில் வெளியேற்றுதல். 

    4 அணு குண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுதல். 

    5 காடுகளை அழித்தல் 11 புவியின் அமைப்பு ஓடு மூடி கண்ட ஓடு சமுத்திர         ஓடு மேல் முடி கீழ்; முடி மையம் உள் மையம் வெளி; மையம் 

43 உயிர்க்கோளம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் எவை? 

    1 உயிர்ப் பல்வகைமை பாதிக்கப்படுதல். 

    2 சூழல் சமநிலை குன்றுதல். 

    3 மண் வளமிழத்தல் 

    4 மண்ணரிப்பு ஏற்படுதல். 

    5 உயிர்த்தொகுதிகள் அழிவுக்குள்ளாதல். 

புவியின் அமைப்பு 

44 புவியின் அமைப்பில் உள்ளடங்கும் மூன்று படைகளும் எவை? 

    1.ஓடு (i.கண்ட ஓடு, ii. சமுத்திர ஓடு)

    2.மூடி (i.மேல் மூடி, ii.கீழ் மூடி)

    3.மையம் (i.உள் மையம் ii.வெளி மையம்)

45 புவியோட்டின் முக்கிய இயல்புகள் எவை? 

    1 புவியின் மொத்த நிலத் திணிவில் 1 சதவீதமாகக் காணப்படும். 

    2 இப்படை கற்கோளத்திற்குரியதாகும். 

    3 சமுத்திரப் பகுதிகளில் இதன் தடிப்பு 5 கிலோ மீற்றர் வரையும், கண்டப் 

    பகுதிகளில் 60 கிலொ மீற்றர் வரையான ஆளத்தையும் கொண்டிருக்கும். 

    4 பாறைகளையும் பல்வேறு கனியங்களையும் கொண்டுள்ளது. 

    5 புவியோட்டின் மெல்லிய மேற்படை மண்ணால் ஆனது. 12 

    6 பாறைகளின் அடர்த்தி, அமைப்பு மற்றும் அமைவிடம் அடிப்படையில் இது         இரண்டு வகைப்படும். 

    1 கண்ட ஓடு(சீயல் படை) – கருங்கற் பாறைகளைக் கொண்டுள்ளது. இது 

    சிலிக்காவையும்(Si), அலுமினியத்தையும்(Al) அதிகம் கொண்டிருப்பதால் 

     சீயல்(Sial) படை எனப்படும். 

    2 சமுத்திர ஓடு(சீமாப் படை) – எரிமலைக் குழம்புப் பாறைகளைக் 

    கொண்டுள்ளது. இது சிலிக்காவையும்(ளSi), மக்னிசியத்தையும்(Mg) அதிகம் 

    கொண்டிருப்பதால் சீமாப்;(Sima) படை எனப்படும 

    7 புவியோட்டிலிருந்து மூடியைப் பிரிக்கும் எல்லை மோகோறோவிசிக் 

    தொடர்ச்சியின்மை எனப்படும். 



மூடி 

46 மூடியின் இயல்புகள் எவை? 

    1 புவியோட்டிற்கும் மையத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. 

    2 புவியின் மேற்பரப்பிலிருந்து 2900 கிலோ மீற்றர் ஆழம் வரை                                        விரிவடைந்துள்ளது. 

    3 மொத்த நிலத்திணிவில் 2ஃ3 பங்காகும். 

    4 மேற்பகுதி ஒலிவின் மற்றும் சிலிக்கேற்றைக் கொண்டது. 

    5 கீழ்ப் பகுதி மக்னிசியம் மற்றும் சிலிக்கேற்றைக் கொண்டது. 

    6 பாறைகள் மற்றும் இரசாயனச் சேர்க்கையினால் இரண்டு பகுதிகளைக்             கொண்டது. 

        1 மேல் மூடி 

        2 கீழ் மூடி 

7 மையத்திலிருந்து மூடியை வேறுபடுத்தும் எல்லை கூற்றன்பேர்க் தொடர்ச்சியின்மை  எனப்படும். 



மையம் 

47 மையத்தின் இயல்புகள் எவை? 

    1 மூடியின் கீழ் அமைந்துள்ள பகுதியாகும். 

    2 சேர்க்கையின் அடிப்படையில் இரண்டு பகுதிகளாகக் காணப்படும். 

    1 வெளி மையம் - திரவ உலோகங்களால்(நிக்கல் மற்றும் இரும்பு) ஆனது. 

        இது மூடியிலிருந்து 2250 கிலோ மீற்றர் வரை பரந்துள்ளது. 

    2 உள் மையம் - தடிப்பான உலோகப்படையைக் கொண்டது. வெளி 

        மையத்திலிருந்து 1220 கிலோ மீற்றர் வரை விரிவடைந்துள்ளது. 

புவித் தகடுகள் 

48 பிரதான புவித் தகடுகள் எவை? 

    1. பசுபிக் தகடு 

    2. வட அமெரிக்க தகடு 

    3. தென்னமெரிக்க தகடு 

    4. ஆபிரிக்க         தகடு 

    5. யுறேசிய தகடு 

    6. இந்து அவுஸ்திரேலிய தகடு 

    7. அண்டாட்டிக் தகடு 

49 சிறிய புவித் தகடுகள் எவை 

    1 கறீபியன் தகடுகள் 

    2 கோகாஸ் தகடுகள் 

    3 நெஸ்கா தகடுகள் 

    4 பிலிப்பைன் தகடு 

    5 ஸ்கோசியா தகடு 

    6 அராபியன் தகடு 

    7 நாஸா தகடு 

50 புவித்தகடுகள் எவ்வாறு நகர்கின்றன? 

    மேற்காவுகை ஓட்டத்தால் 

51 புவித்தகடுகள் அசைவதால் ஏற்படும் விளைவுகள் எவை? 

    1 சுனாமி 

    2 நிலநடுக்கம் 

    3 எரிமலை வெடிப்பு 

    4 மண்சரிவு

52 சீயல் படையின் அமைவிடம் யாது?

    சீமா என்னும் அடித்தளப் பாறைப்படை


No comments:

Post a Comment