புவியின் பிரதான பௌதிகப் பண்புகள்
01. புவியின் பிரதான பௌதீகப் பண்புகள் எவை?
தரைத்தோற்றம், காலநிலை
02. புவி மேற்பரப்பில் அவதானிக்கக்கூடிய பௌதிக அம்சங்கள் எவை?
குன்றுகள், மலைகள், மலைத்தொடர்கள், மேட்டுநிலங்கள்
கண்டங்கள்
03. கண்டங்கள் என்றால் என்ன?
சமுத்திர நீர்ப்பரப்பிலிருந்து உயர்ச்சியடைந்தள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது 29 சதவீதமாகும்.
04. உலகில் காணப்படும் கண்டங்களை பருமன் அடிப்படையில் ஒழுங்கு முறையில் குறிப்பிடுக?
ஆசியா, ஆபிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அந்தாட்டிக்கா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா
05. கண்டமேடை என்றால் என்ன?
கண்டங்களின் எல்லையிலிருந்து சமுத்திரத்தை நோக்கி பரந்துள்ள ஆழம் குறைந்த கடற்பரப்பாகும்.
06. கண்டமேடைகளுக்கு உதாரணம் தருக?
வோர்ச் கடலடித்தள மேடை, பீதுறு கடலடித்தள மேடை
07. கண்டச்சாய்வு என்றால் என்ன?
கண்டமேடையின் விளிம்பிலிருந்து சமுத்திரத்தை நோக்கி சாய்வாக அமைந்துள்ள நிலப்பகுதியாகும்.
தீவுகள்
08. தீவுகள் என்றால் என்ன?
நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்ட பல்லுருவ அமைப்பில் காணப்படும் சிறிய நிலப்பரப்பாகும்.
09. ஆசியாக் கண்டமேடையில் அமைந்துள்ள தீவுகள் எவை?
போர்னியோ, ஜாவா, சுமத்திரா, இலங்கை
10. அவுஸ்ரெலியா கண்டமேடைக்குள் அமைந்துள்ள தீவுகள் எவை?
பப்புவா நியூகினி, தஸ்மேனியா
11. ஆபிரிக்க கண்டமேடைக்குள் அமைந்துள்ள தீவு எது?
மடககாஸ்கார்.
12. ஆழமான சமுத்திரத்தில் அரிமலைச் செயற்பாடுகளால் உருவான தீவுகள் எவை?
ஹவாய், ஐஸ்லாந்து
13. இலங்கைக்கு உரித்தான தீவுகள் எவை?
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு,எழுவைதீவு
14. தீவாக அமைந்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?
1 மீன்பிடிக் கைத்தொழில் சிறப்பாக இருக்கும்.
2 சுற்றுலாப் பயணகளின் வருகை
3 துறைமுக வசதிகள் 4 வெப்பநிலை கட்டுப்படுத்தப்படல்
15. தீவாக அமைந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் எவை?
1 கரையோரப் பகுதிகள் அரிக்கப்படுதல்
2 சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு ஏற்படல்
3 வெளிநாடுகளின் தலையீடுகள் ஏற்படுதல்.
சமுத்திரங்கள்
16. சமுத்திரங்கள் என்றால் என்ன?
புவியில் உவர் நீரால் நிறைந்த பாரிய நீர்ப்பரப்பாகும். இது 71 சதவீதமாகும்.
17. சமுத்திரங்களை பருமன் அடிப்படையில் எழுதுக?
பசுபிக் சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம், ஆட்டிக் சமுத்திரம்
18. சமுத்திர அகழி என்றால் என்ன?
சமுத்திரங்களில் காணப்படும் மிக ஆழமான பகுதி
19. உலகின் முக்கிய அகழிகள் எவை?
மரியான ஆகழி(11035 மீற்றர்), மின்டானோ அகழி(10497 மீற்றர்)
20. அதிகளவு அகழிகளைக் கொண்டுள்ள சமுத்திரம் எது?
பசுபிக் சமுத்திரம்
கடல்கள்
21. கடல்கள் என்றால் என்ன?
பகுதியாக அல்லது முழுவதும் நிலப்பகுதியினால் சூழப்பட்டு சமுத்திரங்களுடன் இணைந்து காணப்படும் உவர் நீரினைக் கொண்ட நீர்ப்பகுதிகள் கடல்கள் ஆகும்.
22. முழுதும் நிலத்தால் சூழப்பட்ட கடல்கள் எவை?
கஸ்பியன்கடல், ஏரல்கடல்
23. பகுதியளவில் நிலத்தால் சூழப்பட்ட கடல்கள் எவை?
மத்தியதரைக்கடல், செங்கடல், கருங்கடல், மஞ்சள்கடல்
24. சமுத்திரத்துடன் இணைவைக் கொண்ட கடல்?
அரபிக்கடல், சீனக்கடல்
25. சமுத்திரங்களையும், கடல்களையும் வளங்களாக மனிதன் பயன்படுத்தம் சந்தர்ப்பங்கள் எவை?
போக்குவரத்து, மீன்பிடி, சுற்றுலா, பொழுதுபோக்கு, நீர்மின் உற்பத்தி
உலகப்படம் குறித்தற் பயிற்சி 01 – கண்டங்களும், சமுத்திரங்களும் குறித்தல்.
உலகப்படம் குறித்தற் பயிற்சி 02 – தீவுகள் குறித்தல்.
உலகப்படம் குறித்தற் பயிற்சி 03 – கடல்கள்; குறித்தல்.
மலைத்தொடர்கள்
26. மலைத்தொடர்கள் என்றால் என்ன?
பல்வேறு சிகரங்களையும் சாய்வுகளையும் கொண்ட உயர் எழுச்சிகளுடன்
கூடியதாகப் பரந்துள்ள நிலத்தோற்றங்களாகும்.
27. மலைத்தொடர்களுக்கு உதாரணம் தருக?
வடஅமெரிக்கா – றொக்கி, அப்பலாச்சியன்
தென் அமெரிக்கா – அந்தீஸ்
ஆபிரிக்கா – அற்லஸ், டிரக்கன்பேர்க்
ஐரோப்பா – அல்ப்ஸ், அப்பினைன்
ஆசியா - இமயமலை
அவுஸ்ரேலியா – பெரிய பிரிப்பு மலைத்தொடர்
உலகப்படம் குறித்தற் பயிற்சி 04 – மலைகள் குறித்தல்.
மேட்டுநிலங்கள்
28. மேட்டு நிலங்கள் என்றால் என்ன?
மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள தட்டையான உயர் நிலங்கள்
29. கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரத்தில் அமைந்துள்ள மேட்டு நிலங்கள் எவை?
திபெத், பமீர்
30. மேட்டுநிலங்களுக்கு உதாரணம் தருக?
வடஅமெரிக்கா – மெக்சிக்கோ மேட்டுநிலம்
தென் அமெரிக்கா – பிறேசிலியன் மேட்டுநிலம்
ஆபிரிக்கா – பீ - மேட்டுநிலம்
ஆசியா – திபெத், பமீர், தக்கணம், ஈரான் மே.நி அரேபியா பீடபூமி,
மொங்கோலிய மேட்டுநிலம்
31. இலங்கையில் அமைந்துள்ள மேட்டுநிலங்கள் எவை?
வெலிமடை, மகாவலத்தன்ன, கொஸ்லாந்தை, ஹட்டன்
உலகப்படம் குறித்தற் பயிற்சி 05 – மேட்டுநிலங்கள் குறித்தல்
சமவெளிகள்
32. சமவெளிகள் என்றால் என்ன?
உயரம் குறைந்த மிகவும் பரந்த பிரதேசத்திலே வியாபித்துக் காணப்படும் தட்டையான நிலமாகும்.
33. சமவெளிகளுக்கு உதாரணம் தருக?
வடஅமெரிக்கா – வடஅமெரிக்க பெரிய சமவெளி
ஐரோப்பா – வட ஐரோப்பிய சமவெளி
அவுஸ்ரேலியா – நுல்லைபார் சமவெளி
ஆசியா – சைபீரியச் சமவெளி, மஞ்சூரியச் சமவெளி, வடசீனச் சமவெளி,
இந்து கங்கைச் சமவெளி
34. உருவாக்க முறையின் அடிப்படையில் சமவெளிகளின் வகைகள் எவை?
1. கரையோரச் சமவெளி 2. வண்டற் சமவெளி 3. பனிக்கட்டியாற்றுச் சமவெளி
35. உலகின் மலைப்பாங்கான, மற்றும் சமவெளிப் பிரதேசங்களில் இடம்பெறும் மானிட நடவடிக்கைகள் எவை?
1. படிக்கட்டு மறையில் நெற் பயிர்ச்செய்கை
2. தேயிலை, இறப்பர் பயிர்ச்சயெ;கை
3. மந்தை வளர்ப்பு
4. பொழுதுபோக்கு
5. நீர்மின் உற்பத்தி
உலகப்படம் குறித்தற் பயிற்சி 06 – சமவெளிகள் குறித்தல்.
ஆறுகள்
36. ஆறுகள் என்றால் என்ன?
தெளிவான பள்ளத்தாக்குகளின் ஊடாக சமுத்திரம், ஏரி, வடிநிலம் , கடல் நோக்கிப்பாய்ந்து செல்லும் இயற்கையான நீர்.
37. ஆறுகள் உற்பத்தியாகும் மூலங்களையும் அவற்றுக்கான உதாரணங்களையும் தருக?
ஊற்று – தேம்ஸ் நதி
ஏரி – நைல்நதி
உருகிய பனி – றைன்நதி
மலைப்பகுதி – மகாவலிகங்கை
38. உலகின் முக்கிய ஆறுகளைத் தருக?
வடஅமெரிக்கா – மக்கன்சி நதி, மிசூரி மிசிசிப்பி
தென் அமெரிக்கா – அமேசன், பரான
ஆபிரிக்கா – நைல், கொங்கோ, நைகர் ஐரோப்பா – டன்யூப், வொல்கா
ஆசியா – ஒப், ஜென்சி, லீனா, அமுர், குவாங்கோ, இந்து, கங்கை,பிரம்மபுத்திரா
அவுஸ்ரேலியா – மறேடார்லிங்
உலகப்படம் குறித்தற் பயிற்சி 07 – ஆறுகள் குறித்தல்.
ஏரிகள்
39. ஏரிகள் என்றால் என்ன?
நிலத்தில் காணப்படும் இறக்கங்களில் நன்னீர் நிறைந்து காணப்படுதலாகும்.
40. ஏரிகளுக்கு உதாரணம் தருக?
ஆசியா – பைக்கால் ஏரி, பல்காஸ் ஏரி
வடஅமெரிக்கா – ஐம்பெரும் ஏரிகள்(சுப்பீரியர், கூறன், ஈரி, ஒன்ரரியோ,
அவுஸ்ரேலியா – அயர் ஏரி
ஐரோப்பா – லடோகா ஏரி
தென் அமெரிக்கா – தித்திக்கா ஏரி
ஆபிரிக்கா – விக்டோரியா ஏரி,தங்கனிக்கா, சாட்
41. உள்நாட்டுக் கடல்கள் என்றால் என்ன?
கடல் நீரினால் நிரப்பப்பட்ட பாரிய நீர்த்தேக்கமாக இருப்பவையாகும்.
42. உலகில் மிகப்பெரிய ஏரி எது?
சுப்பிரியர்
43. உலகில் மிக உயரத்தில் அமைந்த ஏரி எது?
தித்திக்கா
44. ஆறுகளும், ஏரிகளும் மனித நடிவடிக்கைகளில் பெறும் முக்கியத்துவங்கள் எவை?
போக்குவரத்து, நன்னீர் மீன்பிடி, விவசாயம், சுற்றுலா.
காலநிலை
45. காலநிலை என்றால் என்ன?
நீணட காலமாக நிலவுகின்ற வளிமண்டலத்தின் பொதுவான இயல்புகள்
46. காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை?
வெப்பநிலை, மழைவீழ்ச்சி, மழைப்பருவம்
47. காலநிலைப் பரம்பல் பற்றி முதன் முதலில் கருத்து வெளியிட்டவர் யார்?
அரிஸ்டோட்டில்
48. அரிஸ்டோட்டலின் காலநிலை பிரிப்பின் இயல்புகள் எவை?
1. உலகினை மூன்று காலநிலை வலயங்களாகப் பிரித்தார்.
2. உலகின் அகலக்கோட்டு அமைவிடத்திற்கேற்ப வெப்பநிலைப் பரம்பலில் ஏற்படும் மாற்றங்களை இக்காலநிலைப் பாகுபாட்டிற்கு அடிப்படையாகக் கொண்டார்.
49. காலநிலைப் பாகுபாட்டை மேற்கொண்ட ஏனைய அறிஞர்கள் யாவர்?
ஒஸ்ரின்மில்லர், தோன்வைற், கெப்பன்
50 காலநிலை வலயங்களை அட்டவணைப்படுத்திக் காட்டுக.
காலநிலை வலயங்கள் |
அகலக்கோட்டு அமைவிடம் |
பண்பு |
பரந்துள்ள பிரதேசம் |
அயன வலயம் |
கடகக்கோட்டிற்கும் மகரக்கோட்டிற்கும் இடையில் |
•உயர்வெப்பநிலை 180Cக்கு மேல் • உயர் மழைவீழ்ச்சி 2500mm – 4000mm • மொன்சூன் காலநிலை சிறப்பு |
• அயனக் காடுகள் – அமேசன், கொங்கோ • அயனப் பாலைவனம் – சகாரா, அரேபியா, தார், பெரிய அவுஸ்ரேலியா • அயனப் புல்வெளி – சவன்னா • இலங்கை,இந்தியா |
இடைவெப்ப
வலயம் |
கடகக்கோட்டிற்கும்
ஆட்டிக் வட்டத்திற் கிடையிலும் மகரக் கோட்டிற்கும் அந்தாட்டிக் வட்டத்திற்கும் இடையிலும் |
• மத்தியதலைக்
காலநிலை சிறப்பு • ஒவ்வொரு
பரவகாலங்களிலும் வெப்பநிலையில் மாற்றங்கள் காணப்படும். • மழையுடன்
கூடிய குளிர் காலநிலை காணப்படும் |
• ஐரோப்பாவின்
தென்பகுதி - ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் • ஆபிரிக்காவின் வடபகுதி – எகிப்து,
டுனிசியா, லைபீரியா |
முனைவு
வலயம் |
ஆட்டிக்
வட்டத்திற்கும் வடமுனைவுக்கு இடையிலும் அந்தாட்டிக் வட்டத்திற்கும் தென் முனைவுக்கும் இடைப்பட்டது |
• வரடாந்த மழைவீழ்ச்சி 250 – 300 மில்லி மீற்றர் • மூடுபனியும், மiிப்பனி வீழ்ச்சியம் காணப்படும். • விசேட
காலநிலையாக துந்திராக் காலநிலை உள்ளது |
ஊசியிலைக்
காடுகள் காணப்படும். துருவமான்,
பனிக்கரடி, |
தீவுகள்
கடல்களும் சமுத்திரங்களும்
மேட்டுநிலங்களும் சமவெளிகளும்
No comments:
Post a Comment