Tuesday, November 1, 2022

தரம் 10 அலகு 04

இலங்கையின் விவசாயம்

01 விவசாய நாடாக இலங்கையின் இயல்புகள் எவை?

1 விவசாயத்திற்கு ஏற்ற சூழலைக் கொண்டது

2 விவசாயப் பொருளாதார நாடாக விளங்குகிறது.

3 இலங்கையின் பொருளாதாரமும், கலாசாரமும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

நெல்

02 சுதந்திரத்தின் பின்னர் நெற்பயிர்ச்செய்கை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை?

1 வறள் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்களை அமைத்தல்.

2 குளங்களை புனரத்தாரணம் செய்தல்.

3 நெற்பயிர்ச்செய்கையில் பசுமைப் புரட்சியின் செல்வாக்குக் காரணமாக நெல் வர்த்தகப் பயிராக மாற்றமடைந்துள்ளமை.

03 நெற்பயிர்ச்செய்கையின் முக்கியத்தவங்கள் எவை? (விசேட பண்புகள்)

1 நெல் இலங்கை மக்களின் பிரதான உணவாகும்.

2 உள்ளுர் வர்த்தகப் பயிராக முக்கியம் பெற்றுள்ளது.

3 நெல் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் பல சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

4 பல்வேறு கைத்தொழில்களுக்கான மூலப்பொருட்களை வழங்குகின்றது.

04 நெல் ஆராய்ச்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?

போம்புவல, மகாஇலுப்பல்லம, பத்தலேகொட, ஹிங்குராங்கொட,

அம்பாந்தோட்டை

Saturday, August 6, 2022

சமவெளி

 

சமவெளி பற்றிய தகவல்கள்

இது உலகின் உணவுக் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. சமவெளி என்பது பரந்து விரிந்து உயரத்தில் மாற்றங்கள் இல்லாத சமதளமாகக் காணப்படும் நிலப்பகுதி ஆகும்.இது உலகில் காணப்படும் முக்கிய நில வடிவங்களில் ஒன்றாகும்.

சமவெளிகள் உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. உலகில் உள்ள நிலப்பரப்பில் 55 சதவீதம் சமவெளிகளால் ஆனதுஉலகில் 80 சதவீத மக்கள் சமவெளிகளில் வாழ்கின்றனர்.

சமவெளிகள் மலைகளின் அடிவாரத்தில், கடற்கரையின் ஓரங்களில், பள்ளதாக்குகளில் மற்றும் பீடபூமிகளின் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.

Tuesday, August 2, 2022

தரம் 10 அலகு 03

உலகின் பிரதான நிலப் பயன்பாட்டின் பிரதான வகைகள்
01. விவசாய நிலப்பயன்பாடு என்றால் என்ன?
    பயிர்ச்செய்கைக்கு நிலத்தைப் பயன்படுத்துவதாகும்.
02. விவசாய நிலப் பயன்பாட்டின் பிரதான அம்சங்கள் எவை?
    பிழைப்பூதியம், வர்த்தக விவசாயம்
03. விவசாயத்துறையில் நிலப்பயன்பாட்டின் பெறுமானம் குறையாமைக்கான     காரணங்கள் எவை?
    1. மக்களுக்குத் தேவையான உணவினை வழங்கல்
    2. கைத்தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குதல்.
    3. உலக சனத்தொகையில் பெரம்பான்மையானோர் விவசாய                                       நடவடிக்கைகளில் ஈடுபடல்
    4. உலக வர்த்தகத்தில் விவசாய உற்பத்திகள் முக்கிய இடம்பெறுகின்றன.

Tuesday, June 28, 2022

தரம் 10 அலகு 07

 படங்களுக்கு ஓர் அறிமுகம்

01. படம் என்றால் என்ன?

      புவி பற்றிய புவியியல் தகவல்களைத் தட்டையான மேற்பரப்பில்                              அளவுத்திட்டத்தின் அடிப்படையில் எடுத்துக் காட்டுவதாகும்.

02. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட படங்களுள் மிகப் பழமையான படத்தினை

       உருவாக்கியவர்கள் யார், அது எவ்வாறு வரையப்பட்டிருந்தது?

        மொசப்பத்தேமியர்கள் (5000 வருடங்களுக்கு முன்னர்). தாம் வாழ்ந்த                      பிரதேசத்தைக் காட்டுவதற்கு பலகையொன்றில் களிமண்ணால் படத்தை           அமைத்திருந்தனர்.

03. தற்பொழுது புவியியல் தகவல்களை படமாக்குவதற்குப் பயன்படும்                      நுட்பமுறைகள் எவை?

        1. பூகோள இடைநிலைப்படுத்தல் முறைமை (GPS)

        2. புவியியல் தகவல் முறைமை(GIS)

        3. தொலை உணர்வு (RS)

04. படங்களில் காட்டப்படும் விடயங்கள் எவை?

        1. பௌதிக அம்சங்கள்

        2. பண்பாட்டு அம்சங்கள்

        3. கோள்கள்

        4. புவியின் உட்பாகம் பற்றிய தகவல்கள்

        5. அகலக்கோடுகள் 

        6. நெடுங்கோடுகள்

Friday, June 24, 2022

தரம் 10 அலகு 02

புவியின் பிரதான பௌதிகப் பண்புகள்

01. புவியின் பிரதான பௌதீகப் பண்புகள் எவை?

        தரைத்தோற்றம், காலநிலை

02. புவி மேற்பரப்பில் அவதானிக்கக்கூடிய பௌதிக அம்சங்கள் எவை?

        குன்றுகள், மலைகள், மலைத்தொடர்கள், மேட்டுநிலங்கள்

        கண்டங்கள்

03. கண்டங்கள் என்றால் என்ன?

        சமுத்திர நீர்ப்பரப்பிலிருந்து உயர்ச்சியடைந்தள்ள பரந்த நிலப்பரப்பாகும்.         இது 29 சதவீதமாகும்.

04. உலகில் காணப்படும் கண்டங்களை பருமன் அடிப்படையில் ஒழுங்கு                     முறையில் குறிப்பிடுக?

        ஆசியா, ஆபிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அந்தாட்டிக்கா,                 ஐரோப்பா, அவுஸ்ரேலியா

Monday, June 20, 2022

தரம் 10 அலகு 01

 புவியின் சேர்க்கை  

01 ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களுள் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் எது? 

    புவி 

02 புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கான காரணங்கள் எவை? 

  • சுவாசிப்பதற்குத் தேவையான வளி இருத்தல். 
  • நீர் இருத்தல் 
  • புவியீர்ப்புச் சக்தி இருத்தல் 
  • பொருத்தமான காலநிலை காணப்படல் 


புவியின் சேர்க்கை / புவியின் தொகுதிகள் 

03 புவியின் மேற்பரப்பின் பரப்பளவு எவ்வளவு? 

    510 மில்லியன் சதுர கிலோமீற்றர் 

04 புவித்தொகுதியில் உள்ளடங்கும் நான்கு தொகுதிகளும் எவை? 

    1 கற்கோளம் / நிலக்கோளம் 

    2 நீர்க்கோளம் 

    3 வளிக்கோளம் 

    4 உயிரிக்கோளம் 

05 புவித்தொகுதிகளுக்கிடையில் நிலவும் இடைத்தொடர்புகள் எவை? 

    1 நீர்க்கோளத்திலுள்ள நீர் நிலைகளில் இருந்தும் தாவரங்களிலிருந்தும் நீர்         ஆவியாகி வளிக்கோளத்தை அடைகின்றது. 

    2 மீண்டும் இந்நீரானத படிவு வீழ்ச்சி மூலம் புவியை வந்தடைகின்றது. 

    3 நீர், வளி, நிலம் சேர்வதனால் உயிர்க்கோளத்தின் உயிர்ச்சூழல் 

    உருவாக்கப்படுகின்றது. 

Tuesday, June 14, 2022

தரம் - 10 அலகு 1 || கற்கோளம் (நிலக்கோளம்)||

 செயற்பாடு 1.2

  1. கற்கோளம் கட்ட அமைப்பின் அடிப்படையில் இரண்டு பகுதிகளை உள்ளடக்கி உள்ளது அவை எவை?
  2. கற்கோளத்தின் அமைப்பில் இலக்கங்கள் குறிக்கும் பகுதிகளைப் பெயரிடுக.



          3.கற்கோளத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும்போது, பல்வேறு வழிகளில் அவை                     பாதிப்புக்களுக்கு உட்படுகின்றன அவற்றைப் பட்டியற்படுத்துக.
          4.கற்கோளத்தின் பயன்பாடுகள் மூன்றினைத் தருக.
          5.கற்கோளத்தினை வரையறைசெய்க.

செயற்பாடு 1.1 விடைகள்
1. 1.புவியோடு (Earth’s Crust)
    2.மேல் மூடி (Upper mantle)
2.  1.சமுத்திர ஓடு
     2.கண்ட ஓடு
     3.கற்கோளம்
     4.மேல் மூடி
3.   கனிய வளங்களைப் பெற்றுக் கொள்ளவதற்காக நிலங்களை அகழ்வதால் நிலம் தரமிழந்து             வருகின்றது.
      காடுகளை அழிப்பதனால் மண்ணரிப்பு அதிகரிக்கின்றது.
      மேற்பμப்பு நிலத்தோற்றம் மாற்றமடைகின்றது.
      தøμக்கீழ் நீர் மட்டம் மாற்றமடைகின்றது.
      வீடுகளிலிருந்தும், கைத்தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளால்                     கற்கோளத்தின் சில படைகளில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
       மாடிக் கட்டடங்கள் மற்றும் பாரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுவதனால் கற்கோளத்தின்          சமநிலை பாதிப்படைகின்றது.
4. உயிர் வாழ்க்கை
    பயிர்ச்செய்கை
    கைத்தொழில்
5.புவியின் ஓடு மற்றும் மேல் மூடியினை உள்ளடக்கிய வலயம் கற்கோளம்
எனப்படுகின்றது.

தரம்- 10 அலகு 1.புவியின் சேர்க்கை

செயற்பாடு 1.1
  1. மிகப்பெரிய தொகுதியாகக் கருதப்படுகின்ற புவி மேற்பரப்பின் பரப்பளவு யாது?
  2. புவித்தொகுதி (Earth system) நான்கு உபதொகுதிகளை உள்ளடக்கியுள்ளது, அவை எவை?
  3. மேற்குறித்த நான்கு உப தொகுதிகளுக்கும் இடையில்காணப்படும் இடைத்தொடர்புகள் எவை?
  4. ஞாயிற்றுத் தொகுதியில்  உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு கோளாகப் புவி சிறப்புற்று விளங்குவதற்குரிய காரணிகள் எவை?
  5. உயிர்ச் சூழலில் உள்ள மூலக்கூறுகள் எவற்றிற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன?
செயற்பாடு 1.1 விடைகள்
  1. 510 மில்லியன் சதுரக் கிலோ மீற்றர்கள்.
  2. 1.கற்கோளம் / நிலக்கோளம் (Lithosphere)                                                    2.வளிமண்டலம்/ வளிக்கோளம் (Atmosphere)                                      3.நீர்க்கோளம் (Hydrosphere)                                                                    4.உயிர்க்கோளம் (Biosphere)
  3.  நீர்க்கோளத்திலுள்ள நீர் ஆவியாக்கம் (Evaporation) மூலம் வளிக்கோளத்தில் சேர்கின்றது.                                                                                         மீண்டும் அந்நீர், படிவுவீழ்ச்சியாகப் புவியை வந்து அடைகின்றது             நீர், வளி மற்றும் மண் ஒன்று சேர்வதால் உயிர்க் கோளத்திலே உயிர்ச் சூழல் உருவாக்கப்படுகின்றது.                                                                                          உயிர்ச் சூழலில் உள்ள மூலக்கூறுகள் நீர்க்கோளம், வளிமண்டலம் மற்றும் கற்கோளம் என்பனவற்றிற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
  4. உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வளி, நீர், சூரியசக்தி என்பவை காணப்படுகின்றமை.
  5. நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் கற்கோளம் என்பனவற்றிற்கு.